உலக நாடுகளில் எங்கும் திருவள்ளுவரின் பெருமை : காவி உடையுடன் திருவள்ளுவர் ; அண்ணாமலை போட்ட டுவிட்டால் சர்ச்சை
Author: Babu Lakshmanan16 ஜனவரி 2024, 1:50 மணி
திருவள்ளுர் தினத்தை முன்னிட்டு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விடுத்துள்ள X தளப்பதிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு X சமூகவலைதளத்தில் அவர் விடுத்துள்ள பதிவில் கூறியிருப்பதாவது :- வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு என்ற மகாகவி பாரதியின் வரிகளுக்கேற்ப, உலகம் முழுவதும் எக்காலத்துக்கும் பொருந்தும்படியான திருக்குறளை வழங்கிய தெய்வப்புலவர் திருவள்ளுவர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது.
மாண்புமிகு பாரதப்பிரதமர் நரேந்திர மோடியின் சீரிய முயற்சியால், திருக்குறள் இன்று உலகின் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, உலகப் பொதுமறை என்ற பெயருக்கு ஏற்ப புகழ் பெற்று திகழ்கிறது. உலக நாடுகளில் திருவள்ளுவரின் பெருமை பரவி வருகிறது.
பாரதத்தின் கலாசாரமும், பாரம்பரியமும், மனித குலத்தின் வாழ்வியல் முறைகளும் நிறைந்திருக்கும் திருக்குறளை உணர்ந்து படிப்போம். அய்யன் திருவள்ளுவரைப் போற்றுவோம், என பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவோடு திருவள்ளுவர் காவி நிற ஆடை உடுத்தியிருப்பது போல புகைப்படம் பகிர்ந்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
0
0