படிப்பதற்காக லண்டன் சென்ற அண்ணாமலை.. பங்கம் செய்த முன்னாள் அமைச்சர்..! (வீடியோ)

Author: Udayachandran RadhaKrishnan
29 August 2024, 5:04 pm

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குறித்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு X தளத்தில் பதிவிட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

சமீபத்தில் அரசியல் குறித்து படிக்க லண்டன் சென்றுள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குறித்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தனது X தளத்தில் வீடியோ ஒன்றை பதிவேற்றம் செய்துள்ளார்.

தமிழக பாஜக தலைவர் திரு அண்ணாமலை மேற்படிப்பிற்காக லண்டன் சென்றதை ஒரு குறும்புக்காரர் ஊடகத்தில் இப்படி போட்டு இருக்கிறார். நான் பார்த்தேன் நீங்கள் பார்ப்பதற்காக என்று பதிவு என்று குறிப்பிட்டுள்ள அந்த பதிவில் இடம்பெற்றுள்ள வீடியோவில் வகுப்பறையில் ஆடுகள் புத்தகத்தை பார்த்து படிப்பது போன்ற வீடியோ காட்சி உள்ளது குறிப்பிடத்தக்கது

  • vaadivaasal movie shooting starts on august ஒரு வழியாக தொடங்கப்போகுது வாடிவாசல்? ஒரு படத்துக்கு இவ்வளவு இழுபறியா?