நிலைப்பாட்டில் இருந்து மாறும் அண்ணாமலை.. திமுகவுக்கு எதிராக பேசுவதில் கவனம் : பாஜகவினருக்கு வார்னிங்!

Author: Udayachandran RadhaKrishnan
16 December 2023, 7:02 pm

நிலைப்பாட்டில் இருந்து மாறும் அண்ணாமலை.. திமுகவுக்கு எதிராக பேசுவதில் கவனம் : பாஜகவினருக்கு வார்னிங்!

நடந்து முடிந்த 5 மாநில தேர்தல் முடிவுகள் குறித்து, தனக்கு நெருக்கமானவர்களிடம் சில முக்கியமான விஷயங்களை பகிர்ந்து கொண்டாராம் மாநில தலைவர் அண்ணாமலை.

அப்போது, “தெலுங்கானாவில், சந்திரசேகர ராவின் குடும்ப அரசியல் பற்றியும், ஊழலை பற்றியும் அதிகமாக பேசியது நாம்தான்.. அக்கட்சியை விமர்சித்ததுடன், பல கேள்விகளையும் எழுப்பியிருந்தோம். ஆனால், அதன் பலனை பலமான கட்டமைப்பு வைத்துள்ள காங்கிரஸ் அறுவடை செய்துவிட்டது.

அதுபோலவே, திமுகவின் குடும்ப அரசியலையும், ஊழலையும் பற்றி, தமிழ்நாட்டில் நாம்தான் அதிகமாக பேசிவருகிறோம்.. அதிமுகவை விட அதிகமாக நாம்தான் பேசி வருகிறோம்.. இங்கும் திமுகவுக்கு கட்டமைப்பு பலமாக உள்ளது.. அதனால், அதன்பலனை அதிமுக அறுவடை செய்துவிட கூடாது.. சற்று ஜாக்கிரதையுடனும், எச்சரிக்கையுடனும் செயல்பட வேண்டும்” என்றாராம்.

ஆக, அதிமுக – பாஜக கூட்டணி முறிந்துள்ள நிலையில், ஆளும் கட்சி மீதான அதிருப்தி வாக்குகளை யார் அள்ள போவது? என்று தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி