ஜெய் ஸ்ரீ ராம் முழக்கம்… அன்னபூரணி பட சர்ச்சை விவகாரத்தில் மனப்பூர்வமாக மன்னிப்பு கோரிய நடிகை நயன்தாரா…!!

Author: Babu Lakshmanan
19 January 2024, 8:42 am

அன்னபூரணி பட விவகாரத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளுக்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில், நடிகை நயன்தாரா மன்னிப்பு கோரினார்.

அன்னபரணி படத்தில் இந்துமத நம்பிக்கைகளை தவறாக காட்டியதாக கூறி, அப்படத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. மேலும், நெட்பிளிக்ஸ் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டமும் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, சர்ச்சைக்குரிய காட்சியை நீக்கும் வரை அன்னபூரணி திரைப்படம் நெட்பிளிக்ஸில் இடம்பெறாது என நிர்வாகம் அறிவிப்பை வெளியிட்டது. இதையடுத்து, இந்து அமைப்பினர் அளித்த புகாரின் பேரில் நடிகை நயன்தாரா, நடிகர் ஜெய் மற்றும் தயாரிப்பாளர்கள் மீது மும்பை போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளது.

இந்த நிலையில், அன்னபூரணி பட விவகாரத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளுக்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில், நடிகை நயன்தாரா மன்னிப்பு கோரினார்.

இது தொடர்பாக ஜெய் ஸ்ரீ ராம் வாசகத்துடன் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- யாருடைய உணர்வுகளையும் புண்படுத்துவது படக்குழுவின் நோக்கமல்ல. எங்களை அறியாமலேயே சிலரது மனதை புண்படுத்தி இருப்பதாக உணர்கிறோம். இந்த விவகாரத்தில் மனப்பூர்வமாக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்னபூரணி படம் வெறும் வணிக நோக்கில் எடுக்கப்பட்ட படமல்ல. ஒரு நல்ல கருத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க முயற்சித்தோம். கடவுள் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கும் நான், ஒருபோதும் இதை உள்நோக்கத்துடன் செய்திருக்க மாட்டேன். மற்றவர் உணர்வை புண்படுத்த வேண்டும் என்ற எண்ணம் துளியும் எனக்கோ, படக்குழுவுக்கோ இல்லை.

நேர்மறையான எண்ணங்களை பரப்புவது ஒன்றே தனது திரைப்பயணத்தின் நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, சினிமாத்துறையினருக்கு இந்து மதத்தை அவமதிப்பதே வாடிக்கையாகி விட்டதாகவும், உங்களின் மன்னிப்பு தேவையில்லை என்று அதிமுக ஆதரவாளரும், அரசியல் விமர்சகருமான கிஷோர் கே சுவாமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

  • jana nayagan shooting finished in may mid and he possibly started political tour in may end முடியப்போகுது படப்பிடிப்பு, இனி அரசியலில் சுறுசுறுப்பு, சுற்றுப்பயணத்திற்கு தயாராகும் விஜய்?