சூடு, சொரணை, மானம் இருந்தா முதல்ல இதுக்கு பதில் சொல்லுங்க.. திமுகவை சும்மா விடமாட்டோம் : இபிஎஸ் ஆவேசம்!!

Author: Udayachandran RadhaKrishnan
20 August 2023, 8:16 pm

தமிழகத்தில் உள்ள மாவட்ட தலைநகரங்களில் நீட் தேர்வை கண்டித்து இன்று காலை 9 மணி முதல் 5 மணி வரை உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற போராட்டத்தில் அமைச்சர்கள் துரைமுருகன், மா.சுப்பிரமணியன், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்துகொண்டு போராட்டத்தை தொடங்கி வைத்தார்.

நீட் விவகாரத்தில் உதயநிதி ஸ்டாலின் நடத்திய உண்ணாவிரதம் ஒரு நாடகம் என இன்று மதுரை வலையங்குளத்தில் நடைபெற்று வரும் “பொன்விழா எழுச்சி” மாநாட்டில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர் ” திமுக ஆட்சியில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது.

2021 ஆம் ஆண்டு சட்டமன்ற பொது தேர்தலின் போது உதயநிதி ஸ்டாலின் அவர்கள்தேர்தல் பிரச்சாரத்தின் போது, திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்து நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்றுதான் சொன்னீங்களா? இல்லையா? பிறகு ஏன் ரத்து செய்யவில்லை?

சூடு, சொரணை, வெட்கம், மானம், ரோஷம் இருந்தால் முதல்ல இதுக்கு பதில் சொல்லுங்க. உதயநிதி ஸ்டாலின் அவர்களே மாணவர்களே ஏமாற்றாதீங்க ஸ்டாலின் அவர்களே மாணவர்களை ஏமாற்றாதீங்க நீட் தேர்வை கொண்டு வந்தது திமுக அதை தடுத்து நிறுத்தியதற்கு போராடியது அதிமுக.

ஏதேதோ சொல்லி இன்று உண்ணாவிரதம் இருந்து நாடகம் ஆடுகிறார்கள் இவர்களே கொண்டு வந்து இவர்களை ரத்து செய்வதற்கு நாடகமும் ஆடுகின்ற ஒரே கட்சி திமுக கட்சி தான். திமுக ஆட்சியில் இருந்தபோது கச்சத்தீவை மீட்க ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?” என காட்டத்துடன் கேள்வியும் எழுப்பியுள்ளார்.

கச்சத்தீவை மீட்போம் என்று ஸ்டாலின் பச்சைப்பொய் பேசினார். கச்சத்தீவை தாரைவார்த்து கொடுத்தது திமுக காலம். கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சி தட்டிக்கேட்கவில்லை. கச்சத்தீவை மீட்க ஜெயலலிதா 2008 ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார். 2011 ஆம் ஆண்டு சட்டமன்றத்தில் அதிமுக அரசு கச்சத்தீவு மீட்பு தீர்மானத்தை நிறைவேற்றியது.

டாஸ்மாக்கில் ஏழை எளியோர் மதுவாங்கினால் ரூ.10 அதிகம் கேட்கிறார்கள். தினமும் டாஸ்மாக்கில் ஒரு கோடி மது பானங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. தினமும் ரூ.10 கோடி முறைகேடு நடக்கிறது. தமிழ்நாட்டில் 3,600 சட்டவிரோத பார்கள் இயங்கி வருகின்றன. கலால் வரி செலுத்தாமல் மது கூடுதல் விலைக்கு விற்கப்படுகிறது. முறைகேடான பார் மூலம் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது. கிடைக்கும் வருவாய் எல்லாம் திமுக மேலிடத்துக்கு செல்கிறது. மேலிடம் என்றால் யார்? அனைத்து வருவாயும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு போகிறது. திமுகவின் வழக்கறிஞர்கள் இன்று அரசு வழக்கறிஞர்கள் ஆகிவிட்டனர். திமுக அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்குகள் தள்ளுபடி செய்யப்படுகின்றன.

உயர்கல்வித் துறை அமைச்சர் மீதான வழக்கு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் உயர்நீதிமன்றமே தாமாக முன்வந்து வழக்கை விசாரிக்கிறது. ஊழல் வழக்கில் விடுவிக்கப்பட்ட திமுக அமைச்சர்களை சும்மா விட மாட்டோம். ஊழல் வழக்கில் சிக்கிய அமைச்சர் கம்பி எண்ணி வருகிறார். அதிமுகவினருக்கு எதிரான வழக்கை சட்டப்போராட்டம் நடத்தி வெல்வோம்.

தொண்டராக இருப்பவர் அதிமுக பொதுச்செயலாளர் ஆகலாம். நான் ஒரு சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்தவன். 15 லட்சம் தொண்டர்கள் பங்கேற்ற இந்த மாநாடு சரித்திர சாதனை படைத்துள்ளது. இதுவரை எந்த மாநாட்டுக்கும் இவ்வளவு பேர் வந்தது கிடையாது. அதிமுக பொன்விழா எழுச்சி மாநாடு சரித்திர சாதனையை படைத்து இருக்கிறது.” என்று அவர் தெரிவித்தார்.

  • Ajith exits Neeruku Ner விஜய் படத்திற்கு NO சொன்ன அஜித்..அடுத்தடுத்து விலகிய பிரபலங்கள்..!
  • Views: - 345

    0

    0