அபாய கட்டத்தை தாண்டினாரா ரிஷப் பண்ட்..? மருத்துவர்கள் சொன்ன முக்கிய தகவல் : மருத்துவமனையில் திரண்ட பாலிவுட் பிரபலங்கள்!!

Author: kavin kumar
31 December 2022, 9:19 pm

ரிஷப் பண்ட் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அவரது குடும்ப நண்பர்கள் மற்றும் அவரை நேரில் சந்தித்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்திய கிரிக்கெட் வீரரான ரிஷப்பண்ட், இன்று காலை டெல்லியில் இருந்து சொகுசு காரில் உத்தரகாண்ட் மாநிலம் ரூர்க்கியில் உள்ள தனது வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். காரை அவரே ஓட்டி சென்றார். டெல்லி-டேராடூன் நெடுஞ்சாலையில் மங்க்ரூர் பகுதி அருகே திடீரென்று கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலை தடுப்பில் மோதியது.

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த பண்ட், தற்போது டேராடூனில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். ரிஷப்பண்ட் உடல்நிலை சீராக உள்ளது என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் ரிஷாப் பண்ட் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அவரது குடும்ப நண்பர்கள் மற்றும் அவரை நேரில் சந்தித்தவர்கள் தெரிவித்துள்ளனர். ரிஷப் பண்டின் தாய் சரோஜ் பண்ட் மற்றும் அவரது சகோதரி சாக்ஷி ஆகியோர் அவருடன் மருத்துவமனையில் உள்ளனர் எனவும் தெரிவித்துள்ளனர்.

பாலிவுட் நடிகர்கள் அனில் கபூர் மற்றும் அனுபம் கேர் இன்று ரிஷப் பண்ட்டை சந்தித்தனர். இது தொடர்பாக கபூர் கூறியதாவது :- அவர் (பண்ட்) நலமாக இருக்கிறார். அவரை ரசிகர்களாகச் சந்தித்தோம். அவர் விரைவில் குணமடைய பிரார்த்திகிறோம். அவர் மீண்டும் விளையாடுவதைப் பார்ப்போம் என்று கூறினார்.

  • Sikandar movie teaser release ஏ.ஆர்.முருகதாஸின் தரமான சம்பவம் LOADING…மிரட்டலாக வெளிவந்த சல்மான் கானின்”சிக்கந்தர்”பட டீஸர்..!
  • Views: - 355

    0

    0