ஆளுநர் பாதுகாப்பு விவகாரத்தில் மன்னிப்பு கேளுங்கள் அல்லது பதவி விலகுங்கள் : முதலமைச்சருக்கு அண்ணாமலை வலியுறுத்தல்!!
Author: Udayachandran RadhaKrishnan19 April 2022, 9:16 pm
தமிழக ஆளுநருக்கு பாதுகாப்பு வழங்க முடியாத முதல்வர் மன்னிப்பு கேட்க வேண்டும் அல்லது பதவி விலக வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
சிவந்தி ஆதித்தனாரின் 9 வது நினைவு தினத்தை முன்னிட்டு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மரியாதை செலுத்திய பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், தமிழக ஆளுநர் மயிலாடுதுறையில் ஞான யாத்திரை தூங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் அந்த நிகழ்ச்சியில் திமுகவை சார்ந்தவர்கள் மற்றும் கூட்டணிக் கட்சிகள் தொண்டர்கள் ஆளுநரின் வாகனம் மீது கல்லை எரிந்து, கருப்புக் கொடியை வீசியிருக்கிறார்.
தமிழக முதல்வரால் ஆளுநருக்கு கூட பாதுகாப்பு வழங்க முடியவில்லை எனவே முதல்வர் பதவி விலக வேண்டும் இல்லையென்றால் ஆளுநரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், பெண்களுக்கான பாதுகாப்பை பொருத்தவரையிலும் திமுக ஆட்சியில் இந்த 10 மாதங்கள்தான் மிக மோசமான மாதங்களாக இருக்கிறது, ஆளுநரை அவமதித்த விவகாரத்தில் மாநில முதலமைச்சர் கண்ணை கட்டிக் கொண்டு இருக்கிறார்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. ஆளுநருக்கு பாதுகாப்பு ஏன் சரியாக கொடுக்கவில்லை என்று விளக்கம் அளிக்க வேண்டும். இது குறித்து உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியுள்ளோம் என கூறினார்.