சிஎஸ்ஐஆர் இயக்குநர் ஜெனரல் பதவிக்கு தமிழகத்தை சேர்ந்த பெண் நியமனம் : முதல் பெண்ணும் இவரே… குவியும் வாழ்த்து!!

Author: Udayachandran RadhaKrishnan
7 August 2022, 8:20 pm

இந்தியாவின் அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி ஆய்வு நிறுவனத்தின் (சிஎஸ்ஐஆர்) இயக்குநர் ஜெனரலாக தமிழகத்தை சேர்ந்த கலைச்செல்வி நியமிக்கப்பட்டுள்ளார். இந்த பதவிக்கு வரும் முதல் பெண் என்ற பெருமை இவருக்கு கிடைத்துள்ளது.

தற்போது இவர் , சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிலையத்தின் இயக்குநராக 2019ம் ஆண்டு முதல் பணியாற்றி வருகிறார்.

கலைச்செல்வி 125 ஆராய்ச்சி கட்டுரைகள், 6 கண்டுபிடிப்புகளுக்கான காப்புரிமை பெற்றுள்ளார். லித்தியம் அயன் பேட்டரி குறித்த ஆராய்ச்சியிலும் ஈடுபட்டுள்ளார்.

தற்போது, நடைமுறையில் இருக்கும் சோடியம் – அயன் /லித்தியம் -சல்பர் பேட்டரிகள் மற்றும் சூப்பர் கெபாசிடர்களை உருவாக்கும் முயற்சியிலும் உள்ளார்.

தற்போது அவர், 38 ஆய்வகங்களையும், 4,600 விஞ்ஞானிகளையும், 8 ஆயிரம் தொழில்நுட்ப வல்லுநர்களை கொண்டுள்ள சிஐஎஸ்ஆர் அமைப்பை வழிநடத்த போகிறார். திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் பிறந்தவரான கலைச்செல்வி, தமிழ்வழியில் பள்ளிப்படிப்பை முடித்தவர்.

இந்தியாவின் உயர் அறிவியல் ஆய்வு நிறுவனமான சிஎஸ்ஐஆர்.,ன் முதல் பெண் தலைமை இயக்குநர் என்ற சிறப்பைத் தமிழகத்தைச் சேர்ந்த நல்லதம்பி கலைச்செல்வி அடைந்திருக்கிறார். வாழ்த்துகள்! தமிழ்வழிக்கல்வி அறிவியலைக் கற்றுணரத் தடையாகாது என்பதற்குக் கலைச்செல்வியின் இந்தச் சாதனையே சிறந்த சான்று!

  • Tamannaah Bhatia and Vijay Varma part ways after years of dating காதலரை பிரிந்தார் நடிகை தமன்னா.. இதுக்கும் அவருதான் காரணமா? இன்ஸ்டா பதிவால் பரபர!