நாம் தமிழர் கட்சியுடன் கூட்டணியா? தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கூறிய தகவல்..!
Author: Udayachandran RadhaKrishnan28 May 2024, 5:43 pm
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் அவர்களின் பிறந்த நாள் மட்டுமே வருடம் 365 நாட்களும் கொண்டாடப்பட்டு வருகின்றது கழக பொதுச் செயளாலர் புஸ்ஸி ஆனந்த் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
உலக பட்டினி தினத்தை முன்னிட்டு சென்னை திருவான்மியூரில் விஜய் கட்சியின் தமிழக வெற்றிக் கழகம் தென்சென்னை நிர்வாகிகளின் ஏற்பாட்டில் 200கும் மேற்பட்ட ஏழை எளிய மக்களுக்கு வடை பாயாசத்துடன் சம்பந்தி விருந்து அளித்தனர்.
திருமண மண்டபத்தில் நடக்கும் திருமணங்களில் அதிகமான பேரை எதிர்பார்த்து உணவு தயாரிப்பார்கள் ஆனால் ஒரு சில நேரங்களில் உணவுகள் அதிகமாக மீந்து விடும் அதை சுத்தம் செய்பவர்கள் மீதம் இருந்த உணவை குப்பையில் கொட்டி விட்டு பாத்திரத்தை சுத்தம் செய்வார்கள்
மேலும் படிக்க: உங்க கட்சி தலைவர்களை பற்றி பேச உங்களுக்கு தைரியம் இருக்கா? அண்ணாமலைக்கு ஆர்பி உதயகுமார் கேள்வி!
அப்படி மீதம் ஆகும் உணவை மண்டபத்திற்கு அருகில் இருக்கும் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மண்டப மேலாளரை சந்தித்து எங்களுக்கு தெரிவியுங்கள் அந்த உணவை நாங்கள் எடுத்துச் சென்று அனாதை இல்லம் மற்றும் முதியோர் இல்லம் போன்ற இள்ளங்களுக்கு கொடுத்து உதவிட வேண்டும் என்று சொல்லி உள்ளோம் என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.