நல்லவேளை CONDOMனு கேட்காம விட்டுட்டீங்க.. நீங்க டாக்டரா? இல்ல திராவிடியன் மாடல் டாக்டரா..? நடிகை கஸ்தூரி காட்டம்!
Author: Udayachandran RadhaKrishnan29 October 2022, 4:46 pm
நடிகை குஷ்புவை திமுக பிரமுகர் சைதை சாதிக் தரக்குறைவாக விமர்சனம் செய்ததை பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இரட்டை அர்த்தத்தல் மோசனை கருத்தைக திமுக பிரமுகர் பேசிய அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.
இதற்கு நடிகை குஷ்பு தனது ட்விட்டரில் கடும் கண்டனங்களை பதிவு செய்தார். உடனே அந்த ட்விட்டை டேக் செய்த திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி, மன்னிப்பு கேட்டு அவர் மீது நடவடிக்கை எடுப்பதாகவும் கூறியிருந்தார்.
அதற்கு குஷ்பு நன்றியும் தெரிவித்து பதிவிட்டிருந்தார். இந்த பேச்சை பேசிய சைதை சாதிக்கும் தன்னுடைய பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. நடிகை குஷ்புவின் மனது இதனால் புண்பட்டிருந்தால் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் கூறியிருந்தார்.
இந்த விவகாரம் குறித்து இணையதளவாசிகள் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தனர். குறிப்பாக சீரியல் நடிகை டாக்டர் ஷர்மிளா, எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருப்பவர். பாஜகவுக்கு எதிராக விமர்சனம் செய்து வரும் இவர், குஷ்புவின் பதிவுக்கு பதில் ட்வீட் ஒன்று போட்டுள்ளார்.
அதில், இந்த பேச்சு கண்டிக்கத்தக்கது மற்றும் மன்னிப்பதற்கு உகந்தது, திராவிட பசங்க என்ற ஹேஸ்டேக்கிலிருந்து உங்களுடைய கவனத்தை பின் வாங்குமாறு நான் விரும்புகிறேன். மேலும் இந்த திராவிடியா பசங்க என்ற ஹேஸ்டேக் நடிகை கஸ்தூரி-யால் முன்னெடுக்கப்பட்டு சங்கி ஸ்டாக்குகளால் ட்ரெண்ட் செய்யப்பட்டு வருகிறது என்று பதிவிட்டு இருந்தார். நீங்களும் இந்த பேச்சை மன்னிப்பீர்கள் என்று நம்புகிறேன் என்று சைதை சாதிக்கின் பேச்சுக்கு மன்னிப்பு கொடுங்கள் என்று கெஞ்சுவது போல ஒரு பதிலை கொடுத்திருந்தார்.
இந்த பதிவை பார்த்த நடிகை கஸ்தூரி, Condone என்றால் ஏற்றுக்கொண்டு அதனை ஊக்கம் அளிப்பது. Condemn என்றால் அதனை எதிர்ப்பது. நல்ல வேளை நீங்கள் CONDOM-ன்னு கேக்காம விட்டீங்க. நீங்கள் நிஜமாகவே டாக்டர் தானா..? அல்லது வசூல்ராஜா டைப்பில் இருக்கும் திராவிடியன் மாடல் டாக்டரா..?
எது எப்படியோ, திரவிடியா என்ற வார்த்தை அருவருக்கத்தக்கது என்று ஒப்புக் கொண்டதற்கு நன்றி என்று ஷர்மிளா-வுக்கு செருப்பால் அடித்தது போல பதில் கொடுத்திருக்கிறார். இதற்கு ஆதரவாகவும் எதிராகவும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
0
0