கூட்டணியாச்சேனு கர்நாடக துணை முதலமைச்சர் மீது பாசமா? இல்ல குதிரை பேரமா? CMக்கு அண்ணாமலை கேள்வி!!

Author: Udayachandran RadhaKrishnan
3 July 2023, 6:20 pm

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் தமிழக முதல்வருக்கு சில கேள்விகள் என பதிவிட்டு வீடியோ ஒன்றை தனது வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், தான் ஒரு டெல்டா காரன் என மார்தட்டி கொண்டிருக்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.

தமிழகத்துக்கு காவிரி தண்ணீரை திறந்து விட முடியாது என கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார். இதனால் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாக இருப்பது தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள்தான்.

டெல்டாக்காரன் என பாவித்து கொண்டிருக்கும் தமிழக முதல்வர் ஏன் இதுவரை கர்நாடக துணை முதல்வரின் கருத்துக்கு கண்டனம் தெரிவிக்க தெரிவிக்கவில்லை? கூட்டணியாயிற்றே என்ற பாசமா? இதை வைத்து பாராளுமன்ற இருக்கைகளுக்கு குதிரை பேரம் பேசலாம் என்ற நோக்கமா?

மக்கள் எப்படி போனால் எனக்கு என்ன என்று அலட்சியமா? இல்லை தான் ஒரு முதல்வர் என்பதையே மறந்து விட்டாரா? டெல்டாக்காரன் ஏன பெருமையாக சொல்லிவிட்டு டெல்டா மக்களுக்கான உரிமை பறிபோகும் போது வாய் மூடி இருப்பது நியாயம் தானா? என கேள்வி எழுப்பி உள்ளார்.

  • Vikraman wife press meet அது ‘அதற்காக’ எடுக்கப்பட்ட வீடியோ.. விக்ரமன் மனைவி பரபரப்பு பேட்டி!