மின்வாரியத்தின் வருவாய் உயர்ந்ததற்கு அந்த அமைச்சரை பாராட்ட உள்ளீர்களா? CM ஸ்டாலினுக்குஅண்ணாமலை கேள்வி!!
Author: Udayachandran RadhaKrishnan19 December 2022, 9:35 pm
பால்வளத் துறை அமைச்சர் நாசர் அவர்களது இல்லத் திருமணத்தை தலைமையேற்று நடத்திவைத்த முதலமைச்சர் ஸ்டாலின் அந்த நிகழ்ச்சியில் பேசும் போது, பால்வளத் துறை அமைச்சராக இருக்கும் நாசர், ஆவின் நிறுவனத்தில் செய்யும் ஆய்வுகளை பார்த்துள்ளேன்.
உணவு பொருளில் முடி விழக் கூடாது என்பதற்காக போடப்படும் தொப்பியை போட்டுக் கொண்டு ஆய்வு பணிகளை அவர் மேற்கொள்வதை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கும்.
கடந்த அதிமுக ஆட்சியை காட்டிலும் திமுக ஆட்சியில் ஆவின் பொருட்களின் விற்பனை அதிகரித்துள்ளது. இதற்கு காரணம் அமைச்சர் நாசரின் உழைப்புதான். ஆவின் நிறுவனத்தோடு அவரது உழைப்பு நின்றுவிடவில்லை. ஆவினில் பல புதிய பொருட்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
நம்பர் 1 தமிழ்நாடு என்ற கனவு நிறைவேறியுள்ளது. ஆவின் மூலம் 4.20 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் பயனடைந்துள்ளனர் என்றார்.
இந்த நிலையில் அமைச்சரை பாராட்டிய முதலமைச்சர் ஸ்டாலின் குறித்து அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஒரே ஆண்டில் ஆவின் பொருள்களின் விலையை 3 முறை உயர்த்தியபின், ஆவின் வருவாய் உயர்ந்துள்ளதாக பாராட்டியுள்ளார் .
முதலமைச்சர் ஸ்டாலின் அமைச்சர் நாசரை பாராட்டியுள்ளார். ஆவின் நெய்யின் விலை மட்டும் கடந்த 9 மாதங்களில் 22% உயர்ந்துள்ளது. அடுத்து என்ன, மின்வாரியத்தின் வருவாய் உயர்ந்ததற்கு சாராய அமைச்சரை பாராட்டவுள்ளீரா? என அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார்.