ஆம்ஸ்டிராங் கொலை… திமுக அரசு மீது நம்பிக்கை இருக்கிறது : கண்டனத்துடன் ராகுல் காந்தி போட்ட பதிவு!

Author: Udayachandran RadhaKrishnan
6 July 2024, 12:38 pm

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் முன் வைத்து நேற்று வெட்டிக் கொல்லப்பட்டார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.அந்த வகையில், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இன்று எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவரான ஆம்ஸ்ட்ராங் கொடூரமான முறையில் கொல்லப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.குற்றவாளிகள் விரைவில் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவதை அரசு உறுதி செய்யும் என்று நான் நம்புகிறேன் என கூறியுள்ளார்.

  • Madhampatty Rangaraj Illegal Affairs கணவரை இழந்த நடிகைகளுடன் டேட்டிங் : பிரபலத்தின் அந்தரங்க லீலைகள் அம்பலம்!