திரையுலகத்துல நீ பண்ணாத சில்மிஷமா? நடிகர் சித்தார்த்தை வெளுத்து வாங்கிய ராணுவ வீரர்.. வைரலாகும் வீடியோ!!

Author: Udayachandran RadhaKrishnan
28 December 2022, 5:08 pm

சர்ச்சைக் பெயர் போன நடிகர் சித்தார்த், வேலை விஷயமாக மதுரைக்கு விமானத்தில் சென்றுள்ளார். இந்த நிலையில் விமான நிலையத்தில் அங்குள்ள சி.ஆர்.பி.எப் அதிகாரிகளால் தானும், தனது பெற்றோரும் துன்புறுத்தலுக்கு ஆளானதாக தெரிவித்துள்ளார்.

ஆளே இல்லாமல் காலியாக இருந்த ஏர்போர்ட்டில் அவர்கள் தனது பெற்றோரின் பையில் இருந்து சில்லறைகளையெல்லாம் எடுக்க சொன்னதாகவும், அப்போது அவர்களிடம் தான் ஆங்கிலத்தில் பேசுமாறு வலியுறுத்தியும் அவர்கள் தொடர்ந்து தங்களிடம் இந்தியில் பேசிக்கொண்டிருந்ததாக பதிவிட்டுள்ளார் சித்தார்த்.

இதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தபோது, இந்தியா இப்படித்தான் இருக்கும் எனக்கூறி அவர்கள் தங்களிடம் கடுமையாக நடந்துகொண்டதாக வேதையுடன் பதிவிட்டுள்ளார் சித்தார்த். மேலும் வேலையில்லாதவர்கள் அதிகாரத்தை காட்டுகின்றனர் என்றும் தனது பதிவில் அவர் காட்டமாக குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில் நடிகர் சித்தார்த்தின் பதிவுக்கு கண்டனம் தெரிவித்துள்ள ராணுவ வீரர், ஆங்கிலத்தில் பேச சொல்லுவதற்கு நீங்க யார்? நடிகராக இருந்து நீங்க பண்ணாத சில்மிஷமா, யார் விமான நிலையம் வந்தாலும், ராணுவ வீரர் தங்கள் கடமையை செய்வார்கள்.

ஆங்கிலத்தில் பேச சொல்ல உங்களுக்கு உரிமையில்ல, இந்தி தெரியாதுனு சொல்லிட்டு போ என கடுமையாக சாடியுள்ள ராணுவ வீரர், வார்த்தையை கவனமாக பேசுங்க என கூறியுள்ளார்.

  • Rashmika Mandanna துரோகம் செய்தாரா ராஷ்மிகா? காங்கிரஸ் எம்எல்ஏ மிரட்டல்.. என்ன நடந்தது?