அப்போ கருப்பர் கூட்டம், இப்போ ‘யூ டு புரூட்டஸ்’… பாஜக நிர்வாகி கைது அரசியல் காழ்ப்புணர்ச்சியே : திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்!!

Author: Udayachandran RadhaKrishnan
9 July 2022, 9:01 pm

தமிழக பா.ஜ.க. செயற்குழு உறுப்பினராக இருப்பவர் சவுதாமணி. இவர் கடந்த ஜனவரி மாதம் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில், இரு மதத்தினர் இடையே மோதலை உருவாக்கும் வகையில் அடையாளம் தெரியாத நபர் பேசிய வீடியோவை பகிர்ந்து, கருத்து பதிவிட்டிருந்தார்.

இதையடுத்து சவுதாமணி மீது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் அவர் மீது மத்திய குற்றப்பிரிவு ‘சைபர் கிரைம்’ போலீசார் வழக்குப்பதிவு செய்து சவுதாமணியை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து கைது செய்தனர்.

பா.ஜ.க. மாநில செயற்குழு உறுப்பினர் சவுதாமணியை தி.மு.க. அரசு பழிவாங்கும் நோக்கோடு கைது செய்திருக்கிறது என அண்ணாமலை கூறியுள்ளார். சமூக ஊடகங்களில் யாரோ வெளியிட்ட பதிவை இவர் மற்றொருவருக்கு பகிர்ந்தார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் இவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

‘கருப்பர் கூட்டம் மூலம் தமிழ் கடவுள் முருகனை, கந்த சஷ்டி கவசத்தை கொச்சைப்படுத்தினார்கள். ‘யூ டு புரூட்டஸ்’ என ‘யூ-டியூப்’ சேனலில் தில்லை நடராஜர் நடனமாடும் கோலத்தை தரம் தாழ்த்தி விமர்சித்துள்ளார்கள். சமீபத்தில் மதுரையில் நடந்த ஒரு ஊர்வலத்தில் தமிழ் கடவுள்களை பற்றி மோசமாக விமர்சனம் செய்துகொண்டே ஊர்வலம் போனார்கள்.

சிலர் தேசத்தின் ஒற்றுமைக்கு எதிராக பிரசங்கம் செய்கிறார்கள். தகுந்த விளக்கம் கொடுக்கப்பட்ட பிறகும் பா.ஜ.க.வை சேர்ந்தவர் என்ற ஒரே காரணத்தால் சவுதாமணி கைது செய்யப்பட்டு இருக்கிறார். இதை வன்மையாக கண்டிக்கிறேன். காழ்ப்புணர்ச்சியோடு இந்த கைது நடவடிக்கையை எடுத்துள்ள தி.மு.க. அரசு உடனடியாக அவரை விடுதலை செய்யவேண்டும் என அவர் கூறியுள்ளார்.

  • valaipechu bismi said the reason behind empuraan movie re censor on sudden விடுமுறை நாளில் சென்சார் பண்ண வேண்டிய அவசியம் என்ன? எம்புரான் விவகாரத்தின் உண்மை பின்னணி இதுதான்- ஓபனாக போட்டுடைத்த பிரபலம்