டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் கைது.. 10 நாள் நீதிமன்ற காவல் வைக்க திட்டம் : இண்டியா கூட்டணி பரபரப்பு புகார்!!

Author: Udayachandran RadhaKrishnan
22 March 2024, 6:20 pm

டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் கைது.. 10 நாள் நீதிமன்ற காவல் வைக்க திட்டம் : இண்டியா கூட்டணி பரபரப்பு புகார்!!

கைது செய்யப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தி, பின்னர் அவருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தபட்டது. அதன் பிறகு அவரை டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறையினர் ஆஜர்படுத்தினர்.

நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை சார்பில் வாதிடுகையில், மதுபானக் கொள்கை முறைவேடு குற்ற சதிகளில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் முக்கிய பங்கு வகிக்கிறார். முறைகேட்டில் ஈடுடப்பட்டு கிடைத்த பணத்தை கோவா சட்டப்பேரவை தேர்தலில் செலவழித்து உள்ளனர். எல்லா நேரங்களிலும் அப்போதைய துணை முதல்வர் மனீஷ் சிசோடியா உடன் அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்பில் இருந்துள்ளார். இந்த வழக்கில் ஏற்கனவே மணீஷ் சிசிடியா விசாரணையில் உள்ளார். எனவே அரவிந்த் கேஜ்ரிவாலிடம் விசாரணை நடத்துவதற்கு 10 நாட்கள் நீதிமன்ற காவல் தேவை என வாதிட்டனர்.

இதனை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் சார்பில் வாதிட்ட மூத்த வழக்கறிஞர், இதனை சாதாரண பிடிவாரண்டு வழக்காக பார்க்க முடியாது. இந்த வழக்கில் ஜனநாயகத்தின் மிகப்பெரிய சிக்கல்கள் உள்ளன. அமலாக்கத்துறை வசம் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக எந்தவித ஆதாரமும் இல்லை.

சட்டவிரோதமாக தன்னிச்சையாக அமலாக்கத்துறை இந்த கைது நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளது என கெஜ்ரிவால் தரப்பு வழக்கறிஞர் தனது வாதத்தை முன்வைத்தார். இந்த வழக்கு விசாரணை தற்போது டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

  • Rafael Nadal retirement reaction by Dhanush ஓய்வு அறிவிப்பு.. நடிகர் தனுஷின் உருக்கமான பதிவு..
  • Views: - 216

    0

    0