சீமானை சீக்கிரமா கைது செய்யுங்க… முதலமைச்சர் ஸ்டாலின், டிஜிபிக்கு பரபரப்பு புகாரளித்த பாஜக பிரமுகர்!!

Author: Udayachandran RadhaKrishnan
4 March 2023, 10:01 pm

அண்மை காலமாக தமிழகம் முழுவதும் வெளிமாநில தொழிலாளர்களுக்கு எதிராக தாக்குதல்கள் நடத்தப்படுவதாக சமூக வலைதளங்களில் வீடியோகள் பரப்பப்பட்டு வருகின்றன.

திருப்பூர், கோவை என வடமாநில தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் வடமாநில தொழிலாளர்களுக்கு எதிராக பல்வேறு தாக்குதல்கள் நடைபெறுவதாக கடந்த இரு தினங்களாக பல்வேறு வதந்தி வீடியோகள் பரப்பப்பட்டு வருகின்றன.

இதன் விளைவாக வடமாநிலங்களில் வசிக்கும், புலம்பெயர் தொழிலாளர்களின் பெற்றோர், உறவினர்கள் பாதுகாப்பு இல்லாத சூழலில் தமிழகத்தில் பணியாற்ற வேண்டாம், சொந்த ஊருக்கு வருமாறு தொழிலாளர்களை வற்புறுத்துகின்றனர்.

அதன்படி புலம்பெயர் தொழிலாளர்கள் பலரும் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்பும் நிலையில் உள்ளனர்.

இந்நிலையில் இது தொடர்பாக பாஜக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எச்.ராஜா வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், புலன் பெயர் தொழிலாளர்களுக்கு எதிராக சீமான் உட்பட பலர், பல யூ டியூப் சேனல்கள் வெறுப்பு பிரச்சாரம் செய்த போது தமிழக அரசும் காவல்துறையும் மௌனமாக இருந்தது இன்றைய சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.

எனவே அவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை தேவை என்று தமிழக முதல்வருக்கும், தமிழக காவல்துறை தலைவருக்கும் கோரிக்கை விடுத்துள்ளார்.

  • Vedhika Marriage News அவசர அவசரமாக நடந்த நடிகை ‘வேதிகா’ கல்யாணம்…அவரே வெளியிட்ட வீடியோவால் ரசிகர்கள் ஷாக்.!