நான் அனுபவம் வாய்ந்த திருடனா..? பிரதமர் இப்படி சொல்லக் காரணம் இதுதான் ; வீடியோ வெளியிட்ட கெஜ்ரிவால்

Author: Babu Lakshmanan
25 May 2024, 9:31 am

மதுபான கொள்கை ஊழல் வழக்கில் எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்பதை பிரதமர் மோடி ஒப்புக்கொண்டுள்ளதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது :- மதுபான கொள்கை ஊழல் நடந்ததாகக் கூறி பா.ஜ.க.வினர் தொடர்ந்து குற்றம்சுமத்தி வருகின்றனர். இது தொடர்பாக சஞ்சய் சிங், மணீஷ் சிசோடியா மற்றும் என்னையும் கைது செய்தனர். ஆம்ஆத்மி கட்சி பிரமுகர்களுக்கு சொந்தமான இடங்கள் உள்பட 500க்கும் மேற்பட்ட சோதனைகள் நடத்தப்பட்டன. ஆனால் அதில் எதுவும் சிக்கவில்லை.

மேலும் படிக்க: பைனலுக்கு போகக் காரணமாக இருந்த ரகசியம் இதுதான்.. ஐதராபாத் கேப்டன் கம்மின்ஸ் சொன்ன தகவல்!!!

நேற்றைய தினம் பிரதமர் மோடி அளித்த பேட்டியில், ஆதாரங்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஏனெனில் கெஜ்ரிவால் ஒரு அனுபவம் வாய்ந்த திருடர் என கூறியிருக்கிறார். இதன்மூலம் மதுபான கொள்கை ஊழல் வழக்கில் எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்பதை பிரதமர் மோடி ஒப்புக்கொண்டுள்ளார். அதை மறைப்பதற்காக, கெஜ்ரிவால் ஒரு அனுபவம் வாய்ந்த திருடர் என கூறுகிறார்.

மதுபான கொள்கை ஊழல் வழக்கு போலியானது என்பதை நீங்களே ஒப்புக்கொண்ட நிலையில், உங்களிடம் எந்த ஆதாரமும் இல்லாத நிலையில், இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அனைவரையும் விடுதலை செய்யுங்கள், என குறிப்பிட்டுள்ளார்.

  • Allu Arjun press meet emotional statement நானும் ஒரு குழந்தைக்கு அப்பா தான்..கண்ணீரோடு பேட்டியளித்த அல்லு அர்ஜுன்..!
  • Views: - 232

    0

    0