திமுகவை எதிர்த்து கேள்வி கேளுங்க.. கூனிக்குறுக வேண்டாம் : கட்சியினருக்கு கார்த்தி சிதம்பரம் அறிவுரை!

Author: Udayachandran RadhaKrishnan
20 July 2024, 6:21 pm

சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் சிவகங்கை இன்று நடைபெற்றது.அதில் கலந்து கொண்டு பேசிய கார்த்தி சிதம்பரம் இவ்வாறு கூறினார்.

மேலும், கூட்டணியால் ஜெயித்தாலும் காங்கிரஸ் கட்சிக்கென்று ஒரு தனி செல்வாக்கு உள்ளது என்ற கார்த்திக் சிதம்பரம் காங்கிரஸ் கட்சி எந்த கட்சியில் கூட்டணியில் உள்ளதோ அதற்கு தான் சிறுபான்மையினர் வாக்களிக்கின்றனர் என்றும் கூறினார்.

இளைஞர்கள் காங்கிரஸ் கட்சியை நாடி வருவதில்லை,நாம் தமிழர் போன்ற
புதிய கட்சிகளுக்குதான் செல்கிறார்கள் என்றவர், அதனை காங்கிரஸ கட்சி தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், கூட்டணி என்பதால் நாம் எதனையும் தட்டி கேட்காமல் கூனி, குறுகி நிற்க கூடாது என்றும் காங்கிரஸ் கட்சியினரை கேட்டுக் கொண்டார்.

  • Kayadu Lohar Visit Kalahasti Temple Crowd Gathered பவ்யமாக பழத்தை எடுத்து கொடுத்த கயாடு லோஹர்… மொத்தக் கூட்டமும் சுத்தி வந்திருச்சே!