அதிமுக நிர்வாகி படுகொலை.. கணக்குக்கு கைது செய்யாம ஆக்ஷன் எடுங்க ; திமுக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்!

Author: Udayachandran RadhaKrishnan
28 July 2024, 3:37 pm

கடலூர் அதிமுக நிர்வாகி படுகொலைக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் இபிஎஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடலூர் நவநீதம் நகர் பகுதியைச் சேர்ந்த கழக வார்டு செயலாளர் திரு. பத்மநாதன் அவர்கள் இரு சக்கர வாகனத்தில் சென்றுக்கொண்டிருந்தபோது மர்மபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார் என்ற சம்பவம் கேட்டு மிகுந்த அதிர்ச்சியுற்றேன்.

திரு. பத்மநாதன் அவர்களின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தங்களையும் தெரிவித்துக்கொள்வதுடன் அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

விடியா திமுக ஆட்சியில் யாருக்கும், எங்கும் பாதுகாப்பு இல்லை. குறிப்பாக, அரசியல் கட்சியினர் தொடர்ந்து கொலை செய்யப்படும் நிலையில் இதனைத் தடுக்க விடியா திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை.

மாறாக கணக்குக்கு சில கைதுகளைக் காட்டி, அதனை விளம்பரமும் செய்து, தனது வழக்கமான கண்துடைப்பு நடவடிக்கைகளால் அரசியல் கொலைகளை கடந்துவிட நினைக்கும் விடியா திமுக முதல்வருக்கு எனது கடும் கண்டனம்.

திரு. பத்மநாதன் கொலையில் தொடர்புள்ள அனைவரையும் துரிதமாக கைது செய்து, உரிய சட்ட நடவடிக்கை எடுக்க விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

  • Keerthy Suresh new glamorous look கவர்ச்சி உடையில் பிரபல நடிகருடன் குத்தாட்டம்…வைரலாகும் கீர்த்தி சுரேஷ் வீடியோ..!
  • Views: - 197

    0

    0