2024ல் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்கும்.. விடிவு காலம் பிறக்கும் : அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் ஆருடம்!!
Author: Udayachandran RadhaKrishnan2 April 2023, 3:42 pm
விழுப்புரத்திற்கு முன்னாள் முதலமைச்சரும் அதிமுகவின் பொதுச் செயலாளராக பதவி ஏற்ற முதல் முறையாக விழுப்புரம் வருகை தரும் எடப்பாடி பழனிச்சாமி விழுப்புரம் 4 முனை சந்திப்பிற்கு வந்த அவருக்கு விழுப்புரம் மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள் சட்டத்துறை அமைச்சரும் தற்போதைய மாநிலங்களவை உறுப்பினரும், விழுப்புரம் அதிமுக மாவட்டச் செயலாளருமான சிவி சண்முகம் தலைமையில பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து மேற்கு காவல் நிலையம் அருகில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக மேடையில் கட்சித் தொண்டர்கள் மத்தியில் எடப்பாடி பழனிச்சாமி பேசியபோது, எம்ஜிஆர் ஜெயலலிதா என்ற இருபெரும் தலைவர்கள் விகித்த பொதுச் செயலாளர் பதவியை உங்கள் மூலமாக எனக்கு வழங்கி இருக்கிறீர்கள்
அனைத்து தொண்டர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் எனது மகத்தான மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன், இந்த இயக்கத்தை அழிக்க வேண்டும் ஒழிக்க வேண்டும் முடக்க வேண்டும் என்று திராவிட முன்னேற்ற கழகம் எத்தனையோ சூழ்ச்சிகளை செய்கின்றன.
அத்தனை சூழ்ச்சிகளையும் முறியடித்து சிவி சண்முகம் போன்ற சட்டப்பேரவை உறுப்பினர்கள் கழக நிர்வாகிகள் தொண்டர்களால் உருவாக்கப்பட்ட இயக்கம். தொண்டர்களின் ஒருவனாக நின்று இந்த பொதுச் செயலாளர் பதவியை ஏற்றுக் கொண்டுள்ளேன்.
தொண்டர் என்ன எண்ணுகின்றாரோ அதை நிறைவேற்றுகின்றதை எனது பணியாக செய்து வருவேன் என்பதை மீண்டும் ஒருமுறை தெரிவித்துக் கொள்கிறோம். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை எப்படியாவது முடக்க வேண்டும் என்பதற்காக சிலர் சூழ்ச்சியாளர்கள் நம்மோடு இருந்து தற்போது பிரிந்து திராவிட முன்னேற்றக் கழகத்தோடு கைகோர்த்து அவர்களது பீ டீ மாக இன்றைக்கு செயல்பட்டு கொண்டுள்ளனர்,
அவர்களையெல்லாம் நீதிமன்றத்தின் மூலமாக சட்டத்தின் மூலமாக வென்று இருபெரும் தலைவர்கள் கண்ட கனவை நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து நிறைவேற்றும் என தெரிவித்து, இன்றைக்கு வேண்டுமென்று திட்டமிட்டு ஆட்சியாளர் மீது ஸ்டாலின் அவர்கள் அண்ணா திமுக தொண்டர் மீதும் கழக நிர்வாகிகள் மீதும் பொய் வழக்கு புனையப்பட்டு வருகின்றனர்.
எத்தனை பொய் வழக்குகள் போட்டாலும் அத்தனையும் சட்டரீதியாக சந்தித்து தகர்த்தெறிவோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை உருவாக்கிய புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்கள் ஆக்கமும் ஊக்கமும் தந்திருக்கிறார்கள்.
அவர் உருவாக்கிய இந்த இயக்கத்தை புரட்சித்தலைவி ஜெயலலிதா அவர்கள் பல்வேறு சோதனையான காலகட்டத்திலும் தாண்டி புரட்சித்தலைவர் எம்ஜிஆர் கண்ட கனவை தனது இறுதி மூச்சு வரை நிறைவேற்றிக் காட்டினார்கள்.
எம் ஜி ஆர் அவர்கள் இந்த கட்சியை தொடங்கிய போது பல்வேறு சோதனைகளை சந்தித்தார்கள். அதற்குப் பிறகு ஜெயலலிதா அவர்கள் நுழைகின்ற பொழுது பல்வேறு சோதனைகளை சந்தித்தார்கள்.
நமது இயக்கம் தோல்வியிலிருந்து இருபெரும் தலைவர்கள் மறைகின்ற வரை பல்வேறு சோதனைகளை சந்தித்து தான் அந்த சோதனையின் மூலமாக உங்கள் மூலமாக வெற்றி என்ற செய்தியை தொண்டர்கள் கொடுத்துக் கொண்டே இருந்தார்கள்.
எம்ஜிஆர் ஜெயலலிதா காலத்திலிருந்து சோதனைகளை சந்தித்துக் கொண்டுதான் உள்ளோம், எத்தனை சோதனைகள் வந்தாலும் அதனை வென்றெடுத்து வெற்றி பெறுவோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை பொருத்தவரை ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்கள் பணியை தொடர்ந்து செய்வோம் எத்தனை சோதனைகள் வந்தாலும் அதனை வெற்றி படிக்கட்டுகளாக மதித்து கடந்து செல்வோம்.
அதிமுகவை யார் சீண்டிப் பார்த்தாலும் அவர்கள் தான் அழிவாகள் அதிமுக தொண்டன் உழைப்பால் உயர்ந்தவன் எந்த பிரதிபலனும் பார்க்காமல் மக்களுக்கு சேவை செய்வதற்காக ஆண்டவனால் படைக்கப்பட்ட தொண்டன் அதிமுக தொண்டன்.
நமது இரு பெறும் தலைவர்கள் இறைவனால் கொடுக்கப்பட்ட கொடை இந்தியாவில் எத்தனையோ தலைவர்கள் இருக்கிறார்கள் மக்களுக்காக வாழ்ந்து மறைந்த தலைவர்கள் எம்ஜிஆர் ஜெயலலிதா அவர்களுக்கு வாரிசு கிடையாது .
இங்கே இருக்கின்ற தொண்டர்கள் தான் வாரிசு அவர்கள் நம்மைத்தான் வாரிசாக பார்த்தார்கள் இந்த இயக்கத்தை எவராலும் சீண்டிப் பார்க்க முடியாது எவராலும் தொட்டுக் கூட அண்ணா திமுகவை பார்க்க முடியாது,
வழக்கு தொடுத்து அச்சுறுத்தி அண்ணா திமுகவை அழிக்க பார்த்தால் கானல் நீராக தான் அது அவர்களுக்கு காட்சியளிக்கும். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்றத் தேர்தலும் வரலாம் மத்தியில் இருக்கின்ற ஆட்சியாளர்கள் அடிக்கடி குறிப்பிட்டு வருகிறார்கள்.
ஒரே நாடு ஒரே தேர்தல் வருகின்ற 2024 இல் நாடாளுமன்ற தேர்தல் வருகின்ற பொழுது சட்டமன்ற தேர்தலும் வரும் நமக்கு விடிவு காலம் பிறக்கும் என அவர்கள் தொண்டர்கள் மத்தியில் எடப்பாடி பேசினார்.