மாயமான உதவி பொறியாளார்… வடசென்னை அனல்நிலையத்தில் சடலமாக கண்டெடுப்பு… அதிர்ச்சியில் உறவினர்கள்..!!

Author: Babu Lakshmanan
20 May 2022, 2:57 pm

திருவள்ளூர் : அத்திப்பட்டு வடசென்னை அனல்மின் நிலையத்தில் பணிபுரிந்த உதவி பொறியாளர் ஹரிகிருஷ்ணன் என்பவர் இரண்டு தினங்களாக காணாமல் போன நிலையில், இன்று அவரின் உடல் தூக்கில் தொங்கிய நிலையில் அனல்மின் நிலையத்தில் இருந்து மீட்கப்பட்டது

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை அடுத்த வடசென்னை அனல்மின் நிலையத்தில் பணிபுரிபவர் அரிகிருஷ்ணன் (40). இவரின் மனைவி பெயர் மாலதி என்கின்ற இளவரசி. இவர்களுக்கு 2 ஆண் மகன்கள் உள்ளனர். ஹரிகிருஷ்ணன் ஸ்ரீபெரும்புதூரிலிருந்து வடசென்னை அனல்மின் நிலையத்தில் கடந்த மூன்று வருடங்களாக உதவி பொறியாளராக வேலை செய்து வருகிறார்.

அவர் இங்குள்ள அனல் மின்நிலைய குடியிருப்பில் தங்கி பணிக்குச் செல்வது வழக்கம். இதற்கிடையே, கடந்த திங்கள்கிழமை அவர் பணிக்கு வந்துள்ளார். இரண்டு தினங்களுக்கு முன்னாள் வரை மனைவியிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியுள்ளார். அதன்பிறகு, அவரிடத்தில் இருந்து எந்தவித தொலைபேசி அழைப்பும் வரவில்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தார் விசாரித்துள்ளனர். அதற்கு அங்குள்ளவர்கள் அவரின் பை மற்றும் இருசக்கர வாகனம் இங்குதான் உள்ளது. மேலும், அவரின் பேகில் செக் செய்த போது, அதில் ஒரு கடிதம் இருந்ததாகவும், அந்த கடிதத்தில் அவர் மிகுந்த மன உளைச்சலில் இருப்பதாகும் கூறப்பட்டு இருந்ததாக மின்வாரிய அலுவலர்கள் கூறினார்கள்.

ஆனால் இதை ஏற்க மறுத்த குடும்பத்தார் ஒன்று திறந்து வந்து இன்று அனல் மின் நிலையம் முன்பாக தர்ணாவில் ஈடுபட்டனர். அவர்களின் உறவினர்கள் இரண்டு பேரை கூட்டிக் கொண்டு மின் நிலையத்தில் உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது கம்பெனியில் ஒரு பகுதியில் அவர் தூக்கில் தொங்கியபடி காணப்பட்டார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரின் குடும்பத்தார், இது குறித்து சரியான விசாரணை செய்ய வேண்டும் என்றும், எங்கள் மகனுக்கு இங்கு உள்ள ஒரு அலுவலர் மிகுந்த மன உளைச்சலை தந்துள்ளார், அதன் காரணமாகத்தான் அவர் உயிர் இழந்திருக்க கூடும் என்று அவர்கள் சந்தேகப்படுவதாகக் கூறினர்.

இதற்கிடையே இறந்த ஹரி கிருஷ்ணனுக்கு வீட்டிலோ அல்லது வெளியிலோ எந்த ஒரு பிரச்சனையும் இல்லை என்றும், இது முழுக்க முழுக்க அவரின் மேல் பணி செய்யும் ஊழியர்களின் மன உளைச்சலால் தான் இந்த நிலைமைக்கு அவர் தள்ளப்பட்டார் என்று அவரின் குடும்பத்தார் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இது குறித்து வழக்குபதிவு செய்த மீஞ்சூர் காவல்துறை புகாரின் அடிப்படையில் விசாரணையை மேற்கொண்டுள்ளது. மின் நிலையத்திலிருந்துஉடலை மீட்டு மீஞ்சூர் போலீசார் பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 874

    0

    0