கடவுள் மறுப்பு வாசகங்கள்… மக்களின் உணர்வை புண்படுத்துவதா? தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!!

Author: Udayachandran RadhaKrishnan
12 September 2022, 2:11 pm

தமிழத்தின் பெரும்பாலான இடங்களில் ஈ.வெ.ராமசாமி சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றின் கீழ், அவர் கூறிய கடவுள் மறுப்பு வாசகங்களும் இடம்பெற்றுள்ளன.

இந்த கடவுள் மறுப்பு வாசகத்தை நீக்க வேண்டும் என்று கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டபோது அதனை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்நிலையில், பெரியார் சிலையின் கீழுள்ள வாசகங்கள், பெரும்பாலான மக்களின் உணர்வுகளை புண்படுத்துவதாகவும், இந்தியாவின் மதசார்பின்மை கொள்கைக்கு எதிராக உள்ளதாகவும் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், ‘ஈ.வெ.ரா.,வின் கடவுள் மறுப்பு வாசகங்கள், கடவுள் மீது நம்பிக்கை கொண்ட மக்களின் உணர்வை புண்படுத்துகிறது. கடவுள் மறுப்பு வாசகங்கள் அடங்கிய சிலையை பராமரிக்க அரசு பணம் செலவு செய்ய முடியுமா?’ எனத் தெரிவித்தார்.

இதனையடுத்து இந்த மனு மீது தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 480

    0

    0