டிடிஎஃப் வாசனை கொலை செய்ய முயற்சி… கர்நாடகாவில் கத்தியுடன் சிக்கிய ஆசாமி : என்ன நடந்தது?

Author: Udayachandran RadhaKrishnan
29 August 2024, 6:15 pm

கோவையை சேர்ந்த பைக் ரைடரான டிடிஎஃப் வாசன் சர்ச்சைகளுக்கு பெயர் போனவர்.

அவர் யூடியூப்களை தான் மேற்கெர்ள பயணம் குறித்து வீடியோக்களை பதிவேற்றி வந்தார். அவரை லட்சக்கணக்கானோர் பின்தொடர்ந்து வந்தனர். தொடர்ந்து விதிமீறலில் ஈடுபட்டு வந்த டிடிஎஃப் வாசனின் லைசன்ஸ் ரத்து செய்யப்பட்டது.

ஆபத்தான பைக் சாகச வீடியோக்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த டிடிஎஃப் வாசன் அவ்வப்போது சர்ச்சையில் சிக்குவது வழக்கம்.

இந்த முறை டிடிஎஃப் வாசன் வெளியிட்டுள்ள வீடியோவில், போதையில் சிலர் என்னை கத்தியால் குத்தி கொலை செய்ய வந்ததாக கூறியுள்ளார்.

கர்நாடகாவின் குடகு மாவட்டத்தில உள்ள சிறிய ஓடையில் தனது நண்பர்களுடன் குளித்துக்கொண்டிருந்த போது, போதையில் வந்த நபர் ஒருவர் இங்கே குளிக்கக்கூடாது, இது எங்களுக்கு சொந்தமான இடம் என கூறியதாவும், அப்போது பேசிக் கொண்டிருந்த போதே இரும்பு கம்பியால் தன்னை ஒருவர் குத்தியதாகவும், தான் லைப் ஜாக்கெட் அணிந்திருந்ததால் உயிர் தப்பியதாகவும், தற்போது தான் உயிரோடு உள்ளதே கடவுள் புண்ணியம் என கூறியுள்ளார்.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!