ராணுவ வீரருக்கு வழங்கிய நிலத்தில் அம்பேத்கர் சிலை வைக்க முயற்சி.. ஆளுங்கட்சி பிரமுகருக்கு எதிராக தீக்குளிக்க முயற்சி!

Author: Udayachandran RadhaKrishnan
29 May 2024, 7:18 pm
Army
Quick Share

ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் பெண்டபாடு மண்டலம் ரவிபாடு கிராமத்தை சேர்ந்த பலிவேல நாகேஸ்வர ராவ் ராணுவத்தில் மேஜர் சுபேதாராக பணியாற்றி வருகிறார்.

இன்னும் இரண்டு மாதங்களில் ஓய்வு பெற உள்ளார். இந்நிலையில், வீடு கட்ட நிலம் தருமாறு அரசிடம் விண்ணப்பித்தார்.

இதனையடுத்து இரண்டு மாதங்களுக்கு முன், நாகேஸ்வர ராவுக்கு, 3 சென்ட் நிலத்தை, மாநில அரசு ஒதுக்கி, பதவு சான்றிதழ் வழங்கியது.

நாகேஸ்வர ராவ் அங்கு வீடு கட்டத் தொடங்கினார். தற்போது ஸ்லாப்பும் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த இடத்தில் அதே பகுதியை சேர்ந்த ஒய்.எஸ்.ஆ.ர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நிர்வாகி அந்த நிலத்தை அபகரிக்க முயன்றார்.

இதற்காக அங்குள்ளவர்கள் சொன்னதை கேட்டு ராணுவ வீரர் வீடு கட்டும் இடத்தில் அம்பேத்கர் சிலையை அங்கு வைத்தால் அந்த இடம் உங்களுடையதாகிவிடும் என்று சிலர் அவரை தூண்டி விட்டனர்.

இதனால் பட்டியிலனத்தவர்களுடன் அம்பேத்கர் சிலையை கொண்டு சென்று கட்டுமானப் பகுதியில் வைக்க முயன்றனர். இராணுவ வீரருக்கு ஆதரவாக வந்தவருக்கும் இரு பிரிவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இதனால் ஏராளமான போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மோதலை தற்காலிகமாக தணித்தனர். இந்நிலையில் நேற்று காலை வருவாய்த் துறை அதிகாரிகள் கிராமத்திற்கு வந்தனர்.

அரசு ஒதுக்கிய நிலத்தின் சர்வே எண் தவறானது எனக் கூறி 24 மணி நேரத்தில் கட்டடத்தை இடிக்க நாகேஸ்வர ராவ் குடும்பத்தினருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

மேலும் படிக்க: பிரதமர் மோடி தியான நிகழ்ச்சியை உடனே ரத்து செய்யுங்க.. திமுக திடீர் மனு!

அந்த நோட்டீசுகளை பெற மறுத்ததால் கட்டுமான பணி நடந்து வரும் சுவரில் ஒட்டியுள்ளனர். இடம் கொடுத்து விட்டு, தற்போது இடிப்பதில் அதிகாரிகள் இரட்டை அணுகுமுறை காட்டுவதாக நாகேஸ்வர ராவ் குடும்பத்தினர் குற்றம்சாட்டினர்.

இந்த நிலையில் நாகேஸ்வரராவ் மனைவி விஜயலட்சுமி உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். அங்கு வந்த டிஎஸ்பி மற்றும் போலீசார் அதனை தடுத்தனர்.

30 ஆண்டுகள் தேசப் பாதுகாப்பில் பணியாற்றிய ராணுவ வீரருக்கு அரசு கொடுக்கும் மரியாதை இதுதானா என நாகேஸ்வரராவ் வருத்தம் தெரிவித்தார்.

வருவாய்த்துறை அதிகாரிகள் பிறப்பித்த நோட்டீஸ்களை நீக்க வேண்டும்.. இல்லாவிட்டால் உயிரை மாய்ப்போம் என ராணுவ அதிகாரியின் குடும்பத்தினர் எச்சரித்துள்ளனர்.

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் புர்கலா ராமசத்தியநாராயணா இந்த நிலத்தை அபகரிக்க இவ்வாறு செய்கிறார் என்று அவர்கள் குற்றம் சாட்டினர். இந்த பிரச்னைக்கு தீர்வு காண அதிகாரிகள் இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

Views: - 130

0

0