இந்து மதம்னா மட்டும் ஏளனமா? துர்கா ஸ்டாலின் கோவிலுக்கு போனது பத்தி உங்களால் பேச முடியுமா? சிபிஐ முத்தரசனுடன் மல்லுக்கட்டிய பாஜக பிரமுகரின் ஆடியோ!!

Author: Udayachandran RadhaKrishnan
8 September 2022, 6:23 pm

காங்கேயம் பாஜக ஆதரவாளர் செல்வகுமார் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொருளாளர் முத்தரசன் ஆகியோர் பேசிக்கொள்ளும் செல்போன் ஆடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது

சென்னையில் அண்மையில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்து கொண்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் இந்து கடவுள்களான விநாயகர் மற்றும் பார்வதி குறித்து விதத்தில் பேசியதாக சர்ச்சை எழுந்துள்ளது.

இதற்கு இந்து அமைப்புகள் சார்பில் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில் தற்போது காங்கேயம் பாஜக ஆதரவு இளைஞர் செல்வகுமார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் ஆகியோரும் பேசிக்கொள்ளும் செல்போன் உரையாடல் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

ஐயா, முத்தரசன் ஐயாங்களா என நான் காங்கேயத்தில் இருந்து செல்வகுமார் என ஆரம்பிக்கும் உரையாடல், முத்தரசன் அவர்களின் மேடை பேச்சை கேட்டதாகவும், ஐயா நீங்கள் வயதுக்கு மூத்தவங்க, அடுத்த மதத்தை புண் படுத்தி பேசுவது தப்பில்லைங்களா, எனவும், அதற்கு முத்தரசன் நான் மதத்தை புண் படுத்தி பேசவில்லை என பதில் கூறுகிறார். பின் பாஜக நிர்வாகி செல்வகுமார், உங்களால் இதே போல் ஒரு கிறிஸ்துவ மதத்தையோ, முஸ்லீம் மதத்தை குறித்தோ மேடையில் பேச முடியுமா என கேள்வி எழுப்புகிறார். மேலும் துர்க்கா ஸ்டாலின் அவர்கள் கும்பகோணம் கோவில் செல்கின்றார். அவருடைய கணவர் சாமியே கும்பிடாத ஸ்டாலின் இருக்குறப்போ நீங்கள் அவங்களை பத்தி பேசியிருக்கலாமல்லங்க அய்யா.

பின் குறுக்கிட்ட முத்தரசன் நான் பேசுவது தப்பு என்றால் அறிக்கை கொடுங்க, இது மாதிரி பேச கூடாதுங்க என கூறுவதுடன் செல்போன் உரையாடல் முடிவடைகிறது.

காங்கேயம் பாஜக ஆதரவாளரும், டிராவல்ஸ் உரிமையாளருமான செல்வகுமார் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொருளாளர் முத்தரசன் ஆகியோர் பேசிக்கொள்ளும் செல்போன் ஆடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 995

    1

    0