திமுக முப்பெரும் விழாவில் விருது அறிவிப்பு… பட்டியலை வெளியிட்டது தலைமை!!

Author: Udayachandran RadhaKrishnan
1 September 2024, 1:17 pm

பெரியார், அறிஞர் அண்ணா ஆகியோரின் பிறந்த நாள் மற்றும் திமுக தொடங்கப்பட்ட நாள் ஆகியற்றை கருத்தில் கொண்டு திமுக சார்பாக ஒவ்வொரு ஆண்டும் முப்பெரும் விழா செப்டம்பர் மாதம் நடைபெறும்.

அந்த வகையில் இந்தாண்டும் மிகப்பெரிய அளிவில் முப்பெரும் விழா நடைபெறவுள்ளது.குறிப்பாக தமிழகத்தில் திமுக ஆட்சி அமைத்து 3 ஆண்டுகளை தாண்டி வெற்றிகரமாக சென்றுகொண்டுள்ளது.

இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக மற்றும் பாஜகவை வீழ்த்து 40க்கு 40 தொகுதிகளை திமுக கூட்டணி கைப்பற்றியது. இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் திமுக சார்பாக பல கூட்டங்கள் பல மாவட்டங்களில் நடத்தப்பட்டது.

இந்த நிலையில் திமுக சார்பாக முப்பெரும் விழா சென்னையில் நடைபெறவுள்ளது. இது தொடர்பாக திமுக தலைமை வெளியிட்டுள்ள அறிவிப்பில், 2024ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் நாள் சென்னை, நந்தனம், ஒய்.எம்.சி.ஏ. திடலில் நடைபெறும் தி.மு.க. பவள விழா ஆண்டு கழக முப்பெரும் விழாவினையொட்டி ஆண்டுதோறும் வழங்கப்படுகின்ற விருதுகளுக்கான பட்டியல் வெளியிடப்படுகிறது.

அந்த வகையில் பெரியார் விருது திருமதி.பாப்பம்மாள் அவர்களுக்கும், அண்ணா விருது அறந்தாங்கி மிசா இராமநாதன் அவர்களுக்கும், கலைஞர் விருது எஸ். ஜெகத்ரட்சகன் அவர்களுக்கும், பாவேந்தர் விருது கவிஞர் தமிழ்தாசன் அவர்களுக்கும், பேராசிரியர் விருது வி.பி. இராஜன் அவர்களுக்கும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  • Kayadu Lohar Visit Kalahasti Temple Crowd Gathered பவ்யமாக பழத்தை எடுத்து கொடுத்த கயாடு லோஹர்… மொத்தக் கூட்டமும் சுத்தி வந்திருச்சே!