அய்யாதுரை பாண்டியனை தட்டி தூக்கிய எடப்பாடி பழனிசாமி… பாஜகவை ஓவர்டேக் செய்த அதிமுக… அதிர்ச்சியில் உறைந்த ஓபிஎஸ்!!

Author: Babu Lakshmanan
5 October 2022, 1:00 pm

தென்மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் அய்யாதுரை பாண்டியனை அதிமுகவில் இணைத்து எடப்பாடி பழனிசாமி, தற்போது அரசியல் கவனத்தை ஈர்த்துள்ளார்.

தென்காசியில் தனக்கென தனிப்பெரும் செல்வாக்கை கொண்டிருப்பவர் பிரபல தொழிலதிபர் அய்யாதுரை பாண்டியன். இவர் கடந்த சட்டப்பேரவை தேர்தலில் திமுகவில் போட்டியிட சீட் கிடைக்கும் என்று எதிர்பார்த்து, கட்சிக்காக பல கோடிகளை செலவிட்டார்.

குறிப்பாக, கொரோனா காலகட்டத்தில் ஸ்டாலினின் வேண்டுகோளை ஏற்று, ஏழை, எளிய மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்தார். இதன்மூலம், அரசியலை கடந்து மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தார். இப்படி கட்சிக்காக ஓடிஓடி வேலை செய்தும், பணத்தை செலவு செய்தும், தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்காததால், திமுக மீது அதிருப்தியடைந்தார்.

பின்னர், திமுகவில் இருந்து விலகி அமமுகவில் இணைந்தார். அங்கு, கட்சியின் வளர்ச்சிக்கான எந்த பணிகளும் எடுக்காத நிலையில், மாணிக்கராஜாவின் போக்கும் இவருக்கு பிடிக்காததால் அங்கிருந்தும் வெளியேறினார். பின்னர், தனது தொழிலை மட்டும் பார்த்து வந்த இவர், அய்யாதுரை பாண்டியன் பேரவை என்ற பெயரில் தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் நலத்திட்ட உதவிகளை தொடர்ந்து வந்தார்.

தென்காசி மாவட்டத்தில் இவருக்கு இருக்கும் ஆதரவை பார்த்து அரசியல் கட்சியினர் அவரை தங்கள் பக்கம் இழுக்க பல்வேறு முயற்சிகளை எடுத்து வந்தது.

இந்த நிலையில், அய்யாதுரை பாண்டியனை பக்காவாக ஸ்கெட்ச் போட்டு அதிமுகவுக்கு தூக்கியுள்ளார் எடப்பாடி பழனிசாமி. ஓ.பன்னீர்செல்வத்துக்கு செக் வைக்கும் விதமாகவும், தென்மாவட்டங்களில் அதிமுகவுக்கு வலுசேர்க்கும் விதமாகவும், ஓபிஎஸ்ஸின் சமுதாயத்தை சேர்ந்தவரை அதிமுகவுக்கு அழைத்து வந்துள்ளார்.

இதற்கான பணிகளை எடப்பாடி பழனிசாமி 6 மாதங்களுக்கு முன்பாகவே தொடங்கி விட்டதாகவும், அவரது தூதுவர்களாக 2 சட்டமன்ற உறுப்பினர்கள் நேரடியாக சென்று எடப்பாடி பழனிசாமிக்கே, போன் போட்டு கொடுத்து பேச வைத்துள்ளனர். அப்போது, பல கோரிக்கைகள் அய்யாதுரை பாண்டியன் தரப்பிலிருந்து முன் வைக்கப்பட்டது. இதனால், அந்த முயற்சிகள் இழுத்துக் கொண்டே இருந்துள்ளது.

பின்னர், அம்பாசமுத்திரம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா (இவர் திருநாவுக்கரசர் சம்பந்தி) மூலம் அது ஒரு வழியாக ஒரு முடிவுக்கு வந்துள்ளது.

இதையடுத்து, எடப்பாடி பழனிசாமி, அய்யாதுரை பாண்டியனை நேராக தனது சேலம் வீட்டுக்கே அழைத்து வருமாறு இசக்கி சுப்பையாவிடம் தெரிவித்திருக்கிறார். அதன்படி, விஜய தசமியான இன்று எடப்பாடி பழனிசாமியின் தலைமையை ஏற்று அதிமுகவில் இணைந்துள்ளார் அய்யாதுரை பாண்டியன். அவருடன் 10,000 பேர் இணையவுள்ள நிலையில் அவர்களுடைய பெயர் விவரங்களுடன் கூடிய பட்டியல் எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கப்பட்டது.

விரைவில் அவர்களுக்கு உறுப்பினர் அட்டை தயாரானதும், ஒரு பெரிய பிரமாண்ட நிகழ்ச்சியை நடத்தி அவர்களை அதிமுகவில் இணைத்துக் கொள்ள திட்டமிட்டுள்ளனர்.

  • Bala about Fans Knowledge வாழப்பழத்த ஊட்ட முடியாது.. ரசிகர்களை சீண்டி பார்த்த பாலா!
  • Views: - 504

    0

    0