செந்தில் பாலாஜிக்கு மீண்டும் பின்னடைவு? ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்ததல்ல என அமலாக்கத்துறை வாதம்!!
Author: Udayachandran RadhaKrishnan15 June 2023, 1:49 pm
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைதான நிலையில் முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே நீதிமன்ற காவலுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் நீதிமன்ற காவலுக்கு எதிரான மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
செந்தில் பாலாஜியை ஜாமினில் விடுவிக்க கோருவது, காவேரி மருத்துவமனைக்கு மாற்றுவது குறித்த மனுக்கள் மீது உத்தரவு பிறப்பிக்கப்பட உள்ளது.
செந்தில் பாலாஜி மனைவி மேகலா தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவை சென்னை ஐகோர்ட்டு விசாரிக்கிறது. நீதிபதிகள் நிஷா, பரதசக்கரவர்த்தி அமர்வில் ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு வந்தது.
கைது செய்யப்படும் நடைமுறை பின்பற்றப்பட்வில்லை, எந்த நோட்டீசும் அளிக்கவில்லை, குடும்பத்தினருக்கும் தகவல் தெரிவிக்கவில்லை என செந்தில்பாலாஜி தரப்பு வழக்கறிஞர் என்ஆர் இளங்கோ வாதிட்டார்.
மேலும் செந்தில்பாலாஜிக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர். நீதிமன்ற காவலிலேயே காவேரி மருத்துவமனையில் சிகிச்சை தர வேண்டும் என வாதிட்டார்.
அப்போது இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என அமலாக்கத்துறை வாதிட்டது. எந்த விதமான இடைக்கால உத்தரவை கோர முடியாது என வாதிட்டு வருகிறது.