ப்ரேக் அப் செய்த காதலி; தோழியின் உயிரை எடுத்த காதலன்; பெங்களூரை நடுங்க விட்ட பகீர் சம்பவம்…!!

Author: Sudha
27 July 2024, 11:31 am

பெங்களூரில் பெண்கள் விடுதிக்குள் புகுந்த அபிஷேக் என்ற இளைஞர் அந்த வளாகத்திற்குள் புகுந்து, கிருதி குமாரியை என்ற பெண்ணை பலமுறை கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடினார். நேற்று சமூக ஊடகங்களில் பிரபலமான கொடூரமான குற்றத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியானது. உதவிக்காக அந்த பெண் அலறும்போதும் அந்த நபர் அவளை மீண்டும் மீண்டும் கத்தியால் குத்துவது மனதை பதை பதைக்கச் செய்கிறது.

கிருதி குமாரியின் அறை தோழியான போபாலைச் சேர்ந்த கரீமா ரத்தோட் என்ற பெண்ணும் கொலை செய்த அபிஷேக்கும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் அபிஷேக் வேலைக்கு போகாமல் ஊர் சுற்றி வந்ததாகவும் அதனால் இருவருக்குள்ளும் சண்டை ஏற்பட்டு பிரிந்துள்ளனர். அபிஷேக் தனது காதலியை சந்திக்க அடிக்கடி விடுதிக்கு வந்து அவருடன் தகராறு செய்துள்ளார்.அதனால் தனது தோழி க்ருதி குமாரி உதவியுடன் வேறு தங்கும் விடுதிக்கு மாறியுள்ளார் கரிமா ரத்தோட். இதை அறியாத அபிஷேக் தனது காதலியை கொலை செய்யும் நோக்கத்துடன் விடுதிக்கு சென்றுள்ளார்.

அங்கு கிருதி குமாரி மட்டும் இருந்ததைக் கண்ட அபிஷேக் அவரால் தான் தனது காதலி அவரை பிரிந்து விட்டதாக குற்றம் சாட்டி அவரை கத்தியால் சரமாரியாக குத்திக் கொலை செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.

  • celebrity reply to Sathyaraj's daughter who criticized Vijay விளக்கு பிடிச்சாங்களா? விஜய்யை விமர்சித்த சத்யராஜ் மகளுக்கு பிரபலம் பதிலடி!