மனைவியிடம் தப்பிக்க மொட்டையடித்து மாறுவேடம் போட்ட கணவன்: ஃபேஸ் புக்கில் லைவ் போட்டு மீட்கச் சொன்ன மனைவி: சிக்கியது எப்படி…!!

Author: Sudha
19 August 2024, 2:31 pm

சரியாக ஒரு வாரத்திற்கு முன்பு… தனது பேஸ் புக் லைவ் மூலம் கர்நாடகாவை அதிரச் செய்திருந்தார் ஸ்ரீபர்ணா என்ற இளம்பெண்.தனது 5 மாத கை குழந்தையுடன் ஃபேஸ்புக் லைவில் வந்து கண்ணீர் விட்டு அழுத இவர், தன் கணவர் விபின் குப்தாவை காணவில்லை எனவும், புகாரளித்தும் போலீசார் அலைக்கழிப்பதாக பேசி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.

தொடர்ந்து, கர்நாடகாவின் ஹோம் மினிஸ்ட்டரான பரமேஸ்வராவை தன் எக்ஸ் தள பக்கத்தில் டேக் செய்து இவர் போட்ட தொடர் பதிவுகள் பெங்களூரு காவல்துறையை உலுக்கியது

இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள ஷாப்பிங் மால் ஒன்றில் அந்த பெண்ணின் கணவரை பெங்களூரு போலீசார் மீட்டிருக்கின்றனர்…

தன்னை தேடி போலீஸ் வரும் என்பதை அப்பெண்ணின் கணவர் முன்கூட்டியே அறிந்த அவர் இதற்காக மொட்டை அடித்து, தன் உருவத்தையே மாற்றி புது தோற்றத்தில் இருந்தார்.

ஐ.டி. ஊழியரான விபின் கை நிறைய சம்பாதிக்கும் நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் 4 ஆம் தேதி மதியம் 2 மணியளவில், தன் விலையுயர்ந்த கவாசாகி பைக்குடன் வீட்டை விட்டு வெளியேறினார், கூடவே தன் பேங்க் அக்கவுண்ட்டில் இருந்து ஒன்றரை லட்ச ரூபாய் பணத்தையும் எடுத்துக் கொண்டு தலைமறைவானார்.

விபின் குப்தாவின் செல்போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்த நிலையில், பண பரிவர்த்தனைகள் மற்றும் சிசிடிவி ஆதாரங்களின் அடிப்படையில் விபின் குப்தாவை தேடி வந்த போலீசார், உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் அவரை கண்டுபிடித்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில் தனது சுதந்திரத்தில் மனைவி எல்லை மீறி தலையிடுவதாகவும், ஒரு சிங்கிள் டீ குடிக்க கூட தன்னை தனியே விடுவதில்லை எனவும் நொந்து போய் சொல்லியிருக்கிறார்.

இதை கேட்டு அதிர்ந்து போன போலீசார், விபின் குப்தாவை பெங்களூரு அழைத்து வந்திருக்கும் நிலையில், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்

  • Nayanthara to walk out of Mookuthi Amman 2 மூக்குத்தி அம்மன் 2 படத்தில் இருந்து நயன்தாரா விலகல்? பதறிய குஷ்பு!