இந்தியாவில் தஞ்சமடையும் ஷேக் ஹசீனா: மாணவர் போராட்டம் முடிவுக்கு வருமா? நேரலையில் பேசும் ராணுவத் தளபதி…..!!
Author: Sudha5 August 2024, 3:57 pm
பங்களாதேஷ் அரசாங்கத்தின் வேலைவாய்ப்பு இட ஒதுக்கீடை திருத்தம் செய்யக்கோரி மாணவர்கள் கடந்த ஒரு மாத காலமாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டக்காரர்களை தீவிரவாதிகள் என அரசு குறிப்பிட்டதால் நாடு முழுவதும் போராட்டம் தீவிரமடைந்தது.இந்தப் போராட்டத்தை எதிர்த்து ஆளும் அவாமி லீக் கட்சியின் மாணவர் பிரிவைச் சேர்ந்தவர்கள் போராட்டம் செய்தனர். இதனால் இரு பிரிவினருக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வந்தது.
இதனையடுத்து போலீஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் ஏற்பட்ட மோதலில் 80க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 100க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலக கோரி ஏற்பட்ட போராட்டத்தில் வன்முறை வெடித்தது.ஏராளமானோர் உயிரிழந்தனர்.
நாடு முழுவதும் வெடித்துள்ள போராட்டத்தால் டாக்காவில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக ஷேக் ஹசீனா வெளியேறியதாகவும் மேலும் விமானம் மூலமாக வெளிநாடு தப்பிச் சென்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைய இருப்பதாக சொல்லப்படுகிறது. ஷேக் ஹசீனா
பதவி விலகிதை மாணவர்கள் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர்.
வங்கதேச ராணுவத் தளபதி இன்னும் சற்று நேரத்தில் தொலைக்காட்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.