தமிழக சட்டம் ஒழுங்கு குறித்து சரமாரி புகார் : அமித்ஷாவை சந்தித்து ஆளுநர் ஆர்என் ரவி சீரியஸ் டிஸ்கஷன்!

Author: Udayachandran RadhaKrishnan
17 July 2024, 3:00 pm

டெல்லி சென்றுள்ள தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று காலை பிரதமர் நரேந்திர மோடியை அவர் சந்தித்து பேசினார்.

நேற்று பிரதமரை கவர்னர் சந்தித்த நிலையில், இன்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை கவர்னர் ஆர்.என். ரவி சந்தித்து பேசி உள்ளார்.இதைத்தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை கவர்னர் ஆர்.என்.ரவி சந்தித்து பேசினார்.

தமிழ்நாட்டின் சட்டம்-ஒழுங்கு குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.இது தொடர்பாக கவர்னர் ஆர்.என்.ரவி கூறுகையில், தமிழ்நாட்டு மக்களை பாதிக்கும் பிரச்சனைகள் குறித்து அக்கறை கொண்டவர் மத்திய அமைச்சர் அமித் ஷா.

தமிழ்நாட்டு மக்களின் பாதுகாப்பு குறித்து அவருடன் ஆலோசனை நடத்தினேன். தமிழக மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அம்சங்களை மத்திய அமைச்சர் அமித் ஷா நன்கு அறிந்து வைத்துள்ளார் என்று கூறினார்.

  • Siragadikkai Aasai Vidhya Reveal the Truth about Leaked Video மீண்டும் அதிர்ச்சி.. சிறகடிக்க ஆசை சீரியல் நடிகையின் ஆபாச வீடியோ லீக் : சிக்கிய ஆதாரம்?!