பிரதமர் மோடி குறித்த பிபிசி ஆவணப்படம்… திமுக எம்பிக்கள் கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் போட்ட திடீர் ஆர்டர்!!

Author: Udayachandran RadhaKrishnan
29 January 2023, 3:08 pm

மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 31-ம் தேதி தொடங்கவுள்ள நிலையில் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் திமுக மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரில் எழுப்ப வேண்டிய கேள்விகள் குறித்து திமுக எம்.பி.க்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். அதன் விவரம்:- குஜராத் வன்முறை குறித்து ‘பிபிசி’ வெளியிட்ட ஆவணப்பட சர்ச்சை குறித்து விவாதிங்களை முன் வைக்க வேண்டும்.

இந்திய பங்குச் சந்தையில் அதானி குழுமத்தால் ஏற்பட்ட இழப்புகள் தொடர்பாக வெளிவந்துள்ள அறிக்கை குறித்தும் கேள்வியெழுப்ப வேண்டும் .

நீட் மசோதா, மதுரை எய்ம்ஸ், தமிழக மீனவர்கள் பிரச்சினை குறித்து விவாதங்கள் முன்வைக்க வேண்டும். சேது சமுத்திர திட்டம், தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, என்.எல்.சி. நிறுவனத்தில் தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டது குறித்து குரல் எழுப்ப வேண்டும் மற்றும் தமிழ்நாடு அரசால், மத்திய அரசுக்கு எழுதப்பட்டுள்ள கடிதங்களின் நிலை குறித்தும் கேள்வியெழுப்ப எம்.பி.க்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.

  • Devayani wins award for short film இயக்குனரான நடிகை தேவயானி : விருது வாங்கி அசத்தல்…குவியும் வாழ்த்துக்கள்..!