அரசியல் பேசும் போது ஜாக்கிரதையா பேசணும்.. அமைச்சர் எ.வ.வேலு நூல் வெளியீட்டு விழாவில் ரஜினி பேச்சு!

Author: Udayachandran RadhaKrishnan
24 August 2024, 8:02 pm

தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியுடனான தனது நினைவுகளை ‘கலைஞர் எனும் தாய்’ எனும் பெயரில் அமைச்சர் எ.வ.வேலு புத்தகமாக எழுதியுள்ளார். இந்த புத்தகத்தின் வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று நடைபெற்றது.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டார். தொடர்ந்து ‘கலைஞர் எனும் தாய்’ புத்தகத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட, அதனை நடிகர் ரஜினிகாந்த் பெற்றுக்கொண்டார். இதையடுத்து ‘கலைஞர் எனும் தாய்’ புத்தகத்தை காட்சி வடிவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய நடிகர் ரஜினிகாந்த், இந்த நிகழ்ச்சிக்கு பேச வரும் முன், என்ன பேச வேண்டும் என்பதை விட என்ன பேசக்கூடாது என்று எழுதி வந்துள்ளதாக கூறினார்.

கலைஞர் கருணாநி என்று சினிமா, இலக்கிய, அரசியல்தான் என்றும், அரசியல் பேசும் போது ஜாக்கிரதையாக பேச வேண்டும் என கூறினார்.

  • Coolie box office predictions ‘கூலி’ அடிபோலி…1000 கோடி உறுதி…சவால் விட்ட இளம் நடிகர்.!