வெற்றியை கொண்டாட ரெடியா இருங்க.. இனி வடக்கு, தெற்கு என்ற பேச்சே இருக்காது.. அண்ணாமலை உற்சாகம்!

Author: Udayachandran RadhaKrishnan
27 May 2024, 1:31 pm

வெற்றியை கொண்டாட ரெடியா இருங்க.. இனி வடக்கு, தெற்கு என்ற பேச்சே இருக்காது.. அண்ணாமலை உற்சாகம்!

தமிழ்நாட்டில் கடந்த மாதம் 19ம் தேதியே வாக்குப் பதிவு முடிந்துவிட்டது. வாக்கு எண்ணிக்கைக்கு இன்னும் 9 நாட்களே உள்ளன. இந்த நிலையில் தமிழக பாஜக நிர்வாகிகளுடன் அண்ணாமலை இன்று ஆலோசனை நடத்தி வருகிறார்.

கூட்டத்தில் நிர்வாகிகள் மத்தியில் அண்ணாமலை பேசியதாவது: ஜூன் 4ம் தேதி பா.ஜ.க வெற்றியை கொண்டாடத் தயாராக இருங்கள்.

பா.ஜ.க3வது முறையாக ஆட்சிக்கு வருவது காலத்தின் கட்டாயம். தாமரை அடர்ந்து, படர்ந்திருக்கும் காட்சியை ஜூன் 4க்கு பின் அனைவரும் பார்ப்பார்கள்.தேர்தல் முடிவுக்கு பின்னர் வடக்கு, தெற்கு என்ற பேச்சு இருக்காது.

மேலும் படிக்க: சென்னை அப்பல்லோவில் வைகோ அனுமதி.. அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடு : கட்சியினருக்கு வேண்டுகோள்!

ஒரு தனிமனிதனை எதிர்த்து இந்தியாவில் உள்ள அனைத்து கட்சிகளும் எதிர்த்தாலும், இதுவரையில் இல்லாத அளவிற்கு அதிகமாக, வலிமையாக 3வது முறையாக பா.ஜ., ஆட்சி அமைக்கும்.

இண்டியா கூட்டணியினரின் கனவுகளை மக்கள் சுக்குநூறாக உடைக்க உள்ளனர். தமிழகத்தை பொறுத்தவரையில் எப்போதும் இல்லாத வகையில் நாட்டை எதிர்க்கக்கூடிய ஆதிக்க சக்திகள் அதிகமாகியுள்ளன.

மோடியை தவறான வார்த்தைகளால் திட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் கூட்டணி அமைத்துள்ளனர் என அவர் பேசினார்.

  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்