திமுகவின் தோலுரித்துக் காட்ட தயாரா இருங்க : தேதியுடன் பாஜகவினருக்கு அண்ணாமலை போட்ட உத்தரவு!

திமுகவின் தோலுரித்துக் காட்ட தயாரா இருங்க : தேதியுடன் பாஜகவினருக்கு அண்ணாமலை போட்ட உத்தரவு!

காவிரி விவகாரத்தில் திட்டமிட்டு தமிழக விவசாயிகளை திமுக அரசு வஞ்சித்து வருவதாகவும், இதனை கண்டித்து வரும் 16-ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடையபிறவுள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், 2018 ஆம் ஆண்டு, மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் முயற்சியால், காவிரி நதி நீர் ஆணையம் அமைக்கப்பெற்று, கடந்த ஐந்து ஆண்டுகளாக, எந்தப் பிரச்சினையும் இல்லாமல், தமிழகத்துக்கு காவிரி நதி நீர் கிடைத்து வந்தது.

கர்நாடக மாநிலத்தில், திமுக கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த உடன், காவிரி நதி நீரைத் திறந்து விடாமல், திட்டமிட்டு தமிழக விவசாயிகளை வஞ்சித்து வருகிறது.

தன் கூட்டணியில் இருக்கும், காங்கிரஸ் கட்சியின், கர்நாடக மாநில அரசைக் கண்டித்து இதுவரையில் ஒரு வார்த்தை கூடப் பேசாத திமுக, சட்டசபையில் மத்திய அரசை வலியுறுத்துகிறோம் என்று சொல்லி, ஒரு கண்துடைப்புத் தீர்மானத்தைக் கொண்டு வந்து, தன் வழக்கமான தீர்மான நாடகத்தை திமுக, திட்டமிட்டு அரங்கேற்றியிருக்கிறது.

சட்டசபை விவாதத்தில், அத்தீர்மானத்தில் உள்ள குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி, பாஜக சட்டமன்ற உறுப்பினரான அக்கா திருமதி. வானதி சீனிவாசன் அவர்கள் பேசியபோது, அவரை முழுவதுமாகப் பேச விடாமல் குறுக்கீடு செய்வதும், ஒலிபெருக்கியை நிறுத்துவதும், அவரின் கருத்துக்களை மக்களிடத்தில் செல்ல விடாமல் ஒளிபரப்பை தடை செய்வதும் ஜனநாயகப் படுகொலையாகும்.

சட்டமன்றத்தில் திமுகவின் வரலாற்றுப் பிழைகளும், ஆண்டாண்டு காலத் தவறுகளும், மக்களுக்கு இழைத்த துரோகங்கள் அனைத்தும் வெளிவந்து விடுமோ என்ற பதட்டம் தான் தெரிந்ததே தவிர, விவசாயிகள் மீதோ, தமிழக மக்கள் மீதோ, திமுகவுக்கு எந்த அக்கறையும் இருப்பதாகத் தெரியவில்லை.

தமிழகத்துக்கும், கேரளா, கர்நாடகா அண்டை மாநிலங்களுக்குமிடையே தீர்க்கப்படாத நதிநீர்ப் பங்கீடு, அணை கட்டும் பிரச்சினை, கடந்த ஐம்பது ஆண்டுகளாக நிலவி வருகின்றன.

இவற்றில் பெரும்பாலான சிக்கல்களும், பிரச்சனைகளும், திமுக ஆட்சிக்காலத்தில் உருவானவை. இவற்றுக்கான நிரந்தரத் தீர்வை ஏற்படுத்த முயற்சிக்காமல், வீண் நாடகமாடி நீண்டகாலமாக தமிழக மக்களை, திமுக ஏமாற்றி வருகிறது.

கர்நாடகா அணைகளில் 80%-த்திற்கும் அதிகமாக தண்ணீர் இருந்தும் காங்கிரசுடன் கூட்டணியில் இருக்கும் திமுக அரசின் முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் தண்ணீரைப் பெற்றுத்தர திறனின்றி நடத்துகின்ற போராட்டம் கண்டனத்துக்குரியது.

ஆட்சியில் உள்ள மாநில அரசு, தண்ணீரைத் தர மறுக்கும், தன் கூட்டணிக் கட்சியைப்பற்றி எதுவும் பேசாமல் மத்திய அரசைக் குறை கூறுவது, ஆளும் கட்சியின் திறமையின்மையைக் காட்டுகிறது.

காவிரி தண்ணீருக்காக கண்துடைப்பு கடையடைப்பு நடத்துவது திமுகவின் கபட நாடகம். டெல்டா விவசாயிகளை வஞ்சிக்கும் ஏமாற்றும் வேலை. பாஜகவின் சார்பிலே டெல்டா மாவட்ட விவசாயிகளின் நலன்களை காப்பாற்றுவதற்காக, கும்பகோணத்தில், வரும் அக்டோபர் 16ஆம் தேதி அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும்.

இந்த உண்ணா நோன்பு போராட்டத்தை முன்னாள் அமைச்சர் தலைவர் திரு. பொன் ராதாகிருஷ்ணன் அவர்கள் தொடங்கி வைக்க, மாநிலப் பொதுச் செயலாளர் திரு.கருப்பு முருகானந்தம் அவர்களின் தலைமையிலே, கும்பகோணத்தில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் மாநிலத் துணைத் தலைவர் திரு. கரு நாகராஜன் அவர்களும், மாநிலப் பொதுச் செயலாளர் திரு.பொன்பாலகணபதி அவர்களும், மாநில விவசாய அணி தலைவர் திரு ஜி கே நாகராஜ் அவர்களும், பாஜக தலைவர்களும், நிர்வாகிகளும் இன்னம் பெருந்திரளாக விவசாயப் பெருமக்களும், பொதுமக்களும் பங்கேற்கிறார்கள்.

தங்களின் கூட்டணிக் கட்சி என்ற ஒரே காரணத்துக்காக, காவிரி நதி நீரைத் திறந்து விடாமல் வஞ்சிக்கும் கர்நாடக காங்கிரஸ் அரசைக் கண்டிக்காமல், அரசுமுறை நிர்வாக நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல், அரசியல் லாபங்களுக்காக, நாடகமாடும் திமுக, தமிழக விவசாயிகளுக்கு துரோகம் இழைக்கிறது. தொடரும் திமுகவின் துரோக வரலாற்றைத் தோலுரித்துக் காட்ட 16-10-2023 அன்று கும்பகோணத்தில் நடத்தப்படும், இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை வெற்றி பெறச்செய்ய அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

நிறைய நெருக்கடிகள்.. நாதகவில் இருந்து காளியம்மாள் விலகல்!

நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவதாக, அக்கட்சியின் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளராக இருந்த காளியம்மாள் அறிவித்துள்ளார். சென்னை: நாகப்பட்டினத்தைச்…

29 minutes ago

பொழைக்க தெரிஞ்ச புள்ள… சோபிதாவை கொண்டாடும் நாகர்ஜூனா குடும்பம்!

சமந்தாவை பிரிந்த நாகசைதன்யா விவாகரத்துக்கு பிறகு சோபிதா துலிபாலாவை காதலிப்பதாக அறிவித்தார். இந்த காதலுக்கும் நாகர்ஜூனா குடும்பம் ஓகே சொன்னது.…

44 minutes ago

மணிமேகலை போட்ட போஸ்ட்…யாருக்கு செருப்படி..குவியும் வாழ்த்துக்கள்.!

ஜீ தமிழில் அடியெடுத்து வைக்கும் மணிமேகலை சின்னத்திரையில் தன்னுடைய ஆங்கரிங் மூலம் ஏகப்பட்ட ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் மணிமேகலை,இவர் கடந்த…

58 minutes ago

கன்னடம் – மராத்தி மோதல்.. கர்நாடகாவில் வெடித்த பூகம்பம்.. என்ன நடந்தது?

கர்நாடக பெல்காவி மாவட்டத்தில் உண்டான மோதலையடுத்து, கன்னடம் - மராத்தி மொழி மோதல் அம்மாநிலத்தில் ஏற்பட்டுள்ளது. பெங்களூரு: கர்நாடக மாநிலத்தின்…

60 minutes ago

மீனாவுடன் மீண்டும் காதல்? கெட் டூ கெதரால் வந்த வினை!

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல முன்னணி நடிகர்களுடன் ஹீரோயினாக நடித்து கொடிகட்டிப் பறந்தவர் நடிகை மீனா. தமிழ், மலையாளம், கன்னடம்,…

1 hour ago

சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு.. 2026ல் வெற்றி கூட்டணி – இபிஎஸ் சூளுரை!

மிழ்நாடு முழுவதும் பெண் குழந்தைகளுக்கும். தாய்மார்களுக்கும், ஏன் காவல் பணியில் ஈடுபட்டிருக்கும் பெண்களுக்கும் கூட பாதுகாப்பற்ற நிலை உள்ளதாக எடப்பாடி…

2 hours ago

This website uses cookies.