பீப் பிரியாணிக்கு மட்டும் தடையா..? யார் இந்த அதிகாரம் கொடுத்தது..? கொந்தளிக்கும் பா.ரஞ்சித்..!!

Author: Babu Lakshmanan
13 May 2022, 9:35 am

ஆம்பூரில் நடக்கும் பிரியாணி திருவிழாவில் பீப் பிரியாணிக்கு தடை விதிக்கப்படுவதாக எழுந்த தகவலுக்கு இயக்குநர் பா.ரஞ்சித் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

உலகப் புகழ்பெற்ற ஆம்பூர் பிரியாணிக்கு புவிசார் குறியீடு பெறும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இதன் ஒரு பகுதியாக, ஆம்பூரில் 3 நாட்களுக்கு பிரியாணி திருவிழா மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை சார்பில் முடிவு செய்யப்பட்டது. இது தொடர்பான அறிவிப்பை திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா வெளியிட்டார்.

இதனிடையே, ஆம்பூர் பிரியாணி திருவிழாவை நடத்து தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில், பிரியாணி திருவிழாவில் பீப் பிரியாணி மட்டும் வேண்டாம் என்று முடிவெடுக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. மாவட்ட நிர்வாகத்தின் இந்த முடிவுக்கு விசிக, இஸ்லாமிய அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

pa-ranjith-updatenews360

இந்நிலையில் இயக்குநர் பா. ரஞ்சித் நடத்தி வரும் நீலம் பண்பாட்டு மையமும் இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது பற்றி அந்த மையத்தின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “திருப்பத்தூர், ஆம்பூர் பகுதியில் பிரியாணி திருவிழா நடைபெறுவதையொட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கூட்டம் நடந்துள்ளது. பீப் பிரியாணியை மட்டும் தடை செய்து மீதமுள்ள 50-க்கும் மேற்பட்ட பிரியாணி கடை அமைக்கப்படும் என்று கூறியது மிகவும் கண்டனத்துக்குரியது.

Briyani_DMK_UpdateNews360

மேலும், ஆம்பூர் பிரியாணி திருவிழாவில் பீப் பிரியாணி மட்டும் வேண்டாம் எனக் ஆட்சியர் கூட்டத்தில் முடிவு செய்துள்ளதை வன்மையாக கண்டிப்போம். பீப் பிரியாணியை மட்டும் தடை செய்ய வேண்டும் என்று அதிகாரம் யார் கொடுத்தது. அரசு இப்போக்கை தடுக்க வேண்டும், எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

  • ajith kumar receive padma bhushan award from president நீங்க வேற மாதிரி சார்…நாட்டின் உயரிய விருதை பெற்றுக்கொண்டார் அஜித்!