இந்துக்கள் குறித்து ராகுல் பேசுவதற்கு முன் திமுகவினர் பேச்சை நியாபகம் வைத்து பேசவும் : நாராயணன் திருப்பதி தாக்கு!

Author: Udayachandran RadhaKrishnan
2 July 2024, 7:14 pm

கிருஷ்ணகிரி மாவட்ட பா.ஜ., அலுவலகத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தல் மற்றும் கட்சி வளர்ச்சி குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது.

இதில் பங்கேற்க வந்த அக்கட்சியின் மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி கூறியதாவது, ராகுல் லோக்சபாவில் பேசுகையில், ராமரை அயோத்தி என்ற நகரில் அடைத்து பேசுகிறார். நரேந்திர மோடி, ஆர்.எஸ்.எஸ்., மட்டும் ஹிந்து மதம் அல்ல எனவும், ஹிந்து மதத்தினர் எல்லோரும் வன்முறையாளர்கள் எனவும் பேசியுள்ளார். தான் பேசியது தவறு என தெரிந்தவுடன், ஹிந்து என்பவர்கள் எப்படி இருக்க வேண்டும் என எல்லாம் தெரிந்தவர் போல் பேசுகிறார்.

அமைதி, சமத்துவம் என அனைவரையும் அரவணைப்பது தான் ஹிந்து மதம் என பேசும் ராகுல், அதற்கு முன் அவர்களின் தி.மு.க., கூட்டணி கட்சியினர்களான பாலு, ராசா, உதயநிதி ஆகியோர் ஹிந்து மதம் குறித்த பேச்சுகளை கேட்க வேண்டும். தமிழக அமைச்சர் உதயநிதி ஹிந்துமதம் அதாவது சனாதன தர்மத்தை அழிப்பேன் என பேசுகிறார்.

அவர்கள் பேசியதை அறியாமல் ராகுல் லோக்சபாவில் ஹிந்து, இஸ்லாம் என மதம் குறித்து பேசுவது அழகல்ல. நாட்டில் வெறுப்பு அதிகரித்துள்ளது. சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடக்கிறது என்றெல்லாம் பேசும் ராகுலுக்கு கடந்த, 2004 முதல், 2014 வரை காங்., ஆட்சியில் அதிக குண்டுவெடிப்புகள், கலவரங்கள் நடந்ததை மறுக்க முடியுமா.

கடந்த, 10 ஆண்டு, பா.ஜ.. ஆட்சியில் தான் அமைதி நிலவியது. பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் முன்னேற்றத்திற்கு பாடுபட்டது பா.ஜ., அரசு மட்டுமே.
தி.மு.க., எம்.பி., ராசா பேசுகையில், மத்திய அரசை மைனாரிட்டி அரசு என பேசுகிறார். கடந்த காலத்தில் மெஜாரிட்டி இல்லாமல் தி.மு.க., ஆட்சி நடந்தபோது அவர்களை மைனாரிட்டி அரசு என மற்ற கட்சிகள் விமர்சித்ததை மறந்துவிட்டாரா.

தன் மீது தலித் முத்திரை குத்தப்பட்டுள்ளது என்கிறார். அவர் கிருஷ்ணகிரியில் கூட நின்றிருக்கலாம். ஆனால் நீலகிரியில் நின்றது ஏன். கண்ணியம், பண்பாடு, ஒழுக்கம் குறித்து பேச தி.மு.க.,வுக்கு அருகதை இல்லை. கள்ளச்சாராயத்தை தடுக்க தெருவுக்கு தெரு போலீசை போட முடியுமா என மூத்த அமைச்சர் துரைமுருகன் பேசுகிறார்.

அதை தடுக்க தெருவுக்கு தெரு டாஸ்மாக்கை திறக்க உள்ளார்களா என தெரியவில்லை. கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் குறித்து பேச, 4 பா.ஜ., எம்.எல்.ஏ.,க்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது.

  • Varun Dhawan Keerthy Suresh viral video அட்லீ போனை பார்த்து கீர்த்தி சுரேஷ் அதிர்ச்சி…ஒரு டைரக்டர்-க்கு உண்டான மரியாதையே போச்சு…!
  • Views: - 254

    0

    0