ஒரு தமிழராக இருந்து.. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தது மிகப்பெரிய இழுக்கு : ப.சிதம்பரம் விமர்சனம்!
Author: Udayachandran RadhaKrishnan23 January 2024, 9:14 am
ஒரு தமிழராக இருந்து.. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தது மிகப்பெரிய இழுக்கு : ப.சிதம்பரம் விமர்சனம்!
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள சவேரியார்புரத்தில் அமுமு தனியார் அறக்கட்டளையின் நூற்றாண்டு விழா மற்றும் அறிவியல் மையம் கட்டடம் தொடக்க விழா நிகழ்ச்சியில் முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப. சிதம்பரம், சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அப்போது அந்த விழாவில் பேசிய முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் இந்திய அளவில் இந்தியா பின்னோக்கி இருப்பது மகிழ்ச்சி அல்ல அதேவேளையில் தமிழ்நாடு முன்னோக்கி இருக்கிறது.
ஆனால் சுகாதாரத்தில் சற்று பின்னோக்கி உள்ளோம், அதை சரி செய்ய வேண்டியது உள்ளது, 5000 ஆண்டுகளுக்கு முன்னாள் தமிழ் மொழி தோன்றியதாக கூறுகின்றனர்.
ஆனால் கடந்த 200 300 ஆண்டுகளாக தான் அறிவியல் அதிக வளர்ச்சியடைந்துள்ளது இன்னும் வரக்கூடிய 200 300 ஆண்டுகளில் அறிவியல் அதீத வளர்ச்சி பெறும். கலாச்சாரம் பண்பாடு இவற்றைத் தாண்டி அறிவியல் என்பது மிகவும் முக்கியமானது என்று பேசினார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் பேசுகையில்: ராமர் கோயில் குடமுழுக்கு என்பது ராமர் சிலையை பிரதிஷ்டை செய்தது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது, ஒன்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியது ஏற்புடையதல்ல, முழு விவரங்களை தெரியாமல் அவர் கருத்தை தெரிவித்து இருக்க கூடாது.
தமிழ்நாட்டில் எந்த கோயிலிலும் ராமர் பூஜை நடத்துவதற்கு எந்த தடையும் யாரும் விதிக்கவில்லை, யார் விரும்பினாலும் கோயிலுக்கு சென்று பூஜை செய்திருக்கலாம் வழிபாடு செய்திருக்கலாம், நிதி அமைச்சரின் செயல்பாடு தமிழ்நாட்டிற்கு மிகப் பெரிய இழுக்கு, இதை தமிழர் ஒருவர் சொல்லி இருக்க வேண்டாம் என்பது தான் எனது கருத்து, ராமர் கோயில் குடமுழுக்கு என்பது பாஜகவின் தேர்தல் வாக்குறுதி அல்ல.
அசாமில் நடந்த வன்முறை கண்டிக்கத்தக்கது, அசாமில் ராகுல் காந்தி ஒற்றுமை பயணம் நியாய முறை பயணம் அமைதியாக மேற்கொண்டார். கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை நடந்து சென்ற போது எந்த ஒரு வன்முறையும் நடக்கவில்லை.
அசாமில் ஏன் நடக்கிறது. அசாமில் பின்புலத்தில் யார் இருக்கிறார்கள். யாருடைய ஆதரவு ஊக்கத்தோடு இந்த வன்முறை நடக்கிறது. இதற்கு அந்த மாநிலத்தின் முதலமைச்சர் தான் முழு பொறுப்பை ஏற்க வேண்டும்.
அந்த முதலமைச்சர் நான் வன்மையாக கண்டிக்கின்றேன். நியாயம் கோரி அமைதி பயணத்தை வன்முறையால் குளைக்க முற்படுவது மிக வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று தெரிவித்தார்.