பெங்களூரூ குண்டுவெடிப்பு குறித்து மத்திய அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே கருத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அண்மையில் பெங்களூரூவில் பிரபலமான ராமேஸ்வரம் கஃபே எனும் உணவகத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. அதிர்ஷ்டவசமாக இந்த தாக்குதலில் எந்த உயிர்ச்சேதமும் ஏற்படாத நிலையில், 8 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த தாக்குதலில் ஈடுபட்ட நபரின் சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக வைத்து குற்றவாளியை தேடி வருகின்றனர். மேலும், துப்பு கொடுத்தால் ரூ.10 லட்சம் சன்மானமும் அறிவிக்கப்பட்டுள்ளது. குற்றவாளியை பிடிப்பதற்கான முயற்சியில் என்ஐஏ அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், தமிழகத்தில் பயங்கரவாத பயிற்சி பெற்று வந்த நபரே, பெங்களூரூவில் உள்ள கஃபேவில் குண்டு வைத்ததாக மத்திய அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே கூறியிருந்தார். அவரது இந்தப் பேச்சுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள X தளப்பதிவில், ” பெங்களூரூ குண்டுவெடிப்பு குறித்து மத்திய அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே கருத்திற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். பாஜகவின் இந்த பிளவுபடுத்தும் பேச்சை தமிழர்களும், கன்னடர்களும் மறுப்பார்கள். அமைதி, நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒற்றுமைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்திய ஷோபா மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாஜகவில் பிரதமர் முதல் அடிமட்ட தொண்டர் வரை பிரிவினைவாத அரசியலில் ஈடுபடுவதை நிறுத்த வேண்டும், எனக் கூறினார்.
தொகுதி மறுவரையறை குறித்த அனைத்துக் கட்சி கூட்டத்தை தேமுதிக பாராட்டிய நிலையில், அதிமுக உடனான கூட்டணியில் விரிசலா என்ற கேள்வி…
பாலிவுட்டில் எதார்த்தம் இல்லை எனக் கூறியுள்ள அனுராக் காஷ்யப், விரைவில் மும்பையை காலி செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார். மும்பை: இது…
உறவுகள் தான் முக்கியம் நடிகர் விஜயகுமாரின் இரண்டாவது மகள் அனிதா விஜயகுமார்,சிறு வயதிலிருந்தே மருத்துவர் ஆக வேண்டும் என்பதில் உறுதியாக…
படத்தின் மீது அதிகரிக்கும் எதிர்ப்பு இயக்குநர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி தயாரிப்பில்,அறிமுக இயக்குநர் பாரதி இயக்கத்தில் உருவாகியுள்ள…
ரஜினியிடம் ஆசி வாங்கிய ஐசரி கணேஷ் 2020ஆம் ஆண்டு வெளியான ‘மூக்குத்தி அம்மன்’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, இயக்குநர் சுந்தர்.சி…
பின்னணி பாடகர்களான திப்பு மற்றும் ஹரிணியின் வாரிசுதான் சாய் அபயங்கர். இவர் ஆல்பங்களுக்கு இன்றைய கால இளசுகள் அடிமை. இவர்…
This website uses cookies.