சிறந்த மாவட்ட திறனுக்காக கரூர், கோவை மாவட்ட ஆட்சியர்களுக்கு விருது : முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கி கவுரவிப்பு…!!!

Author: Babu Lakshmanan
12 March 2022, 1:21 pm

பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய மாவட்டங்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் விருது வழங்கி கவுரவித்தார்.

2022ம் ஆண்டுக்கான முதலமைச்சர் உதவி மையம் மூலம் முதலமைச்சரின் முகவரி துறையில் பெறப்பட்ட மனுக்களுக்கு உரிய முறையில் ஆய்வு செய்து குறை தீர்வு நடவடிக்கை மேற்கொண்டதற்காக திருச்சி மாவட்டத்திற்கும், 2வது இடத்திற்கான பரிசு திருவள்ளூருக்கும் வழங்கப்பட்டது.

2021 மாற்றுத்திறனாளிகளுக்காக சிறப்பாக பணிபுரிந்தமைக்காக நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா மற்றும் சிவகங்கை ஆட்சியர் மதுசூதனன் ரெட்டி ஆகியோர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.

Image

2021 ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை தொடர்பான பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தியமைக்கான விருதை திருவண்ணாமலை தட்டிச் சென்றது. இதில், 2வது இடத்தை தேனியும், 3வது இடத்தை நாமக்கல்லும் வென்றது.

2021-22ம் ஆண்டுக்கான மருத்துவம் மற்றும் மக்கள்நல்வாழ்வு தொடர்பான நலத்திட்டங்களுக்கான விருது ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சங்கர்லால் குமாவத்திற்கு வழங்கப்பட்டது. இதே பிரிவில், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அரவிந்த்திற்கு 2வது பரிசும், திருவள்ளூர் ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸுக்கும் கொடுக்கப்பட்டது.

2021ம் ஆண்டுக்கான சிறந்த மாவட்ட திறன் திட்டம் மற்றும் செயலாக்கத்திற்கான முதல் பரிசு கரூர் ஆட்சியர்
பிரபு சங்கருக்கு வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, கோவை ஆட்சியர் சமீரன், பரிசு தூத்துக்குடி ஆட்சியர் செந்தில்ராஜ் ஆகியோருக்கு முறையே 2 மற்றும் 3வது பரிசு வழங்கப்பட்டது.

சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் அமைப்பான ஒருங்கிணைந்த கடற்கரை மேலாண்மை அமைப்பின் மூலம் நீலக்கொடி திட்டத்தின் கீழ், சுற்றுச்சூழல் கல்வி அறக்கட்டளை, டென்மார்க் மூலம் பெறப்பட்ட உலகப் புகழ்பெற்ற நீலக்கொடி சான்றிதழ், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கோவளம் கடற்கரையை சுத்தமான, சுகாதாரமான மற்றும் பாதுகாப்பான நீலக்கொடி கடற்கரையை பராமரிப்பு செய்ததற்காகசெங்கல்பட்டு ஆட்சியரிடம் ஒப்படைக்கப்பட்டது

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 1437

    0

    0