நண்பனுக்கு துரோகம்.. இரட்டைக் கொலையில் திடீர் திருப்பம் : கொலையாளியை நெருங்கும் போலீஸ்!!

Author: Udayachandran RadhaKrishnan
8 February 2023, 7:38 pm

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த ஜெகன்னாதபுரம் சத்திரம் பகுதியில் குட்டுலு (25) என்ற பீகாரை சேர்ந்த இளைஞர் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி வந்துள்ளார்.

அருகில் உள்ள தனியார் தொழிற்சாலையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்தார். இவருடன் அதே நிறுவனத்தில் பணியாற்றும் அஸாமை சேர்ந்த துவர்க்கா பார் என்பவர் தமது மனைவி, இரண்டு குழந்தைகளுடன் அருகில் உள்ள இருளிப்பட்டு பகுதியில் வசித்து வந்தார்.

நேற்றிரவு பணி முடித்து வீட்டிற்கு வந்த துவர்க்கா பார் தமது மனைவி, குழந்தைகள் காணாமல் போனது கண்டு அக்கம்பக்கத்தில் விசாரித்துள்ளார்.

அப்போது அருகில் உள்ள குட்டுலு என்பவரது வீட்டிற்கு சென்றதாக அக்கம்பக்கத்தினர் கூறியுள்ளனர். இதனையடுத்து தமது மனைவி, குழந்தைகளை தேடிக்கொண்டு வந்து பார்த்த போது குட்டுலு வீடு பூட்டியிருந்தது.

ஜன்னல் வழியே பார்த்த போது இரண்டு குழந்தைகள் வாயில் கட்டப்பட்டும், அவரது மனைவி சுமிதா பார் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் மயங்கிய நிலையில் இருந்துள்ளார்.

இதுகுறித்து அளிக்கப்பட்ட தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த சோழவரம் போலீசார் மயங்கிய நிலையில் இருந்த சுமிதா பாரை (21) மீட்டு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

உயிருக்கு ஆபத்தான நிலைமையில் சிக்ச்சை அளிக்கப்பட்ட நிலையில், குழந்தைகளான சரத் மற்றும் ரீமாவின் சடலங்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து போலீசார் விசாரித்தனர்.

விசாரணையில், துவர்ககா பார் மனைவியுடன் குட்டுலு திருமணத்தை மீறிய உறவு வைத்திருந்தது தெரியவந்தது. இந்த நிலையில் சுமிதா பார் குழந்தைகளை அழைத்து குட்டுலு வீட்டிற்கு சென்ற போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

அதில் இரண்டு குழந்தைகளையும் தலையில் தாக்கி வாயில் டேப் வைத்து கட்டிப்போட்டு கொடூரமாக கொலை செய்துள்ளார். மேலும் கள்ளக்காதலியான சுமிதா பாரை அரிவாளால் தாக்கிய கழுத்தில் வெட்டி விட்டு வீட்டை பூட்டிக் கொண்டு தப்பியோடியது தெரியவந்தது.

இந்த கொலை சம்பந்தமாக 4 தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிர விசரணையில் ஈடுபட்டுள்ளனர். விசரணையில் குற்றவாளி ரயிலில் பீகாருக்கு தப்பி சென்றிருக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

  • கேம் சேஞ்சர்: எஸ்ஜே சூர்யா First Review?
  • Views: - 440

    0

    0