பெரும் பரபரப்பு.. கேப்டன் பிறந்தநாள் விழாவில் மயங்கி விழுந்த மகன் : வெளியான ஷாக் வீடியோ!!

Author: Udayachandran RadhaKrishnan
25 August 2024, 2:38 pm

விஜயகாந்தின் பிறந்தநாளை ஒட்டி சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிகவின் தலைமை அலுவலகத்தில் பிறந்தநாள் கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அவருடைய நினைவிடத்தில் உருவச் சிலையும் அமைக்கப்பட்டு இன்று திறக்கப்பட்டிருந்தது. இதற்கான நிகழ்ச்சியில் தேமுதிகவின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அதேபோல விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியனும் கலந்து கொண்டார். இந்நிலையில் கூட்ட நெரிசல் அதிகமாக இருந்த நிலையில் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் திடீரென மயங்கி விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உடனடியாக அவர் அங்கிருந்து காரில் ஏற்றப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். தொடர்ந்து கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

  • Famous Actress joined in Ajiths Good Bad Ugly அஜித்துடன் இணையும் பிரபலம்.. 25 வருடங்களுக்கு பிறகு ஜோடி சேர்ந்த நடிகை!