அமித்ஷா சொல்வது அத்தனையும் பொய்… மத்திய அரசுக்கு பதிலடி கொடுத்த முதலமைச்சர்!!!

Author: Sudha
1 August 2024, 2:59 pm

கேரளா வயநாடு பகுதியில் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 290 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.காணாமல் போன 200 க்கும் மேற்பட்டோரை தேடும் பணி நடைபெற்று வருகிறது

இந்நிலையில் ராஜ்யசபாவில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, வயநாட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். நிலச்சரிவு குறித்து முன்கூட்டியே கேரளாவுக்கு எச்சரிக்கை விடுத்தோம். 7 நாளுக்கு முன்பே , ஜூலை 23 இல் மத்திய அரசு தகவல் அளித்தது. 24 மற்றும் 25 ஆம் தேதிகளில் மீண்டும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. 27 ஆம் தேதி 20 செ.மீ க்கு மேல் மழை பெய்யும் , நிலச்சரிவு ஏற்படும், மக்கள் உயிரிழக்க வாய்ப்பு உள்ளது என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

முன்கூட்டியே எச்சரிக்கை தரப்படவில்லை இந்த எச்சரிக்கை அமைப்பு என்ன ஆனது என மக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.2014க்கு பிறகு இந்த அமைப்புக்காக மத்திய அரசு ரூ.2 ஆயிரம் கோடி செலவு செய்துள்ளது என அமித்ஷா தெரிவித்தார்.மேலும் தேசிய பேரிடர் மீட்பு படையை சேர்ந்த ஒன்பது குழுக்களை ஜூலை 23 ஆம் தேதியே கேரளாவிற்கு அனுப்பி வைத்ததாகவும், அதன்பிறகும் கேரள அரசு விழித்துக் கொள்ளவில்லை என்றும் விமர்சித்தார்.

கேரள அரசு சரியான நேரத்தில் செயல்பட்டிருந்தால் பல உயிர்களைக் காப்பாற்றியிருக்க முடியும் என்றும் குற்றம் சாட்டினார். எனினும், நிவாரணப் பணிகளில் கேரள அரசுக்கு தேவையான உதவிகளை மத்திய அரசு வழங்கும் என்றும் அமித் ஷா உறுதியளித்தார்.

இந்நிலையில், அமித் ஷாவின் குற்றச்சாட்டு தொடர்பான கேள்விக்கு பதிலளித்த கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்,இந்திய வானிலை ஆய்வு மையம் வயநாடு மாவட்டத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கையை மட்டுமே விடுத்ததாகக் கூறினார். வயநாட்டில் 500 மில்லி மீட்டருக்கு மேல் மழை பெய்துள்ளதாகவும், இது வானிலை ஆய்வு மையம் கணித்ததை விட மிக அதிகம் என்றும் கூறினார். செவ்வாய்க்கிழமை அதிகாலை நிலச்சரிவு ஏற்பட்ட பின்னரே வயநாடு மாவட்டத்துக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகக் கூறிய பினராயி விஜயன், குற்றம் சாட்டுவதற்கான சரியான நேரம் இதுவல்ல என்றும் தெரிவித்தார்.

  • singampuli shared the experience on mayandi kudumbathar movie நான் நடிக்கவே மாட்டேன்னு சொன்னேன், ஆனா அவர்தான் என்னைய?- ஓபனாக போட்டுடைத்த சிங்கம்புலி…