மரங்கொத்திகளும்… மனசாட்சி இல்லா மனிதர்களும்.. நெஞ்சை உலுக்கும் வீடியோ..!!

Author: Babu Lakshmanan
5 August 2022, 4:13 pm

கேரளாவில் சாலை விரிவாக்கப்பணிகள் நடந்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, சாலையின் ஓரத்தில் இருந்த ஒரு பெரிய மரத்தினை அம்மாநில பொதுப்பணித்துறை அதிகாரிகள், புல்டோசர் வைத்து சாய்த்துள்ளனர். மரம் சரிந்து விழும் போது, கடைசி நிமிடம் வரை மரத்தை விட்டு பிரிந்து செல்ல முடியாமல், அதில் இருந்த பறவைகள், மரம் கீழே விழும் சில வினாடிகளில்தான், மரத்தை விட்டு பறந்தோடுகின்றன.

‘மரத்தை துளையிடுவதையே வாழ்க்கை முழுவதும் செய்யும் மரங்கொத்திகள், ஒரு முறை கூட மரத்தை சாய்த்ததில்லை,” என்ற தலைப்பில் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக்கப்பட்டு வருகிறது.

இதனை பார்க்கும் நெட்டிசன்கள் அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து கமெண்ட்ஸ்களை பதிவிட்டு வருகின்றனர்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி