‘நான் இஸ்லாமியர் என்பதால் திமுகவினர் என்னை குறி வைக்கிறார்கள்’ ; வீடியோ ஆதாரத்தை வெளியிட்டு பாஜக பிரமுகர் ஆலிஷா அப்துல்லா குற்றச்சாட்டு..!!

Author: Babu Lakshmanan
24 November 2022, 5:40 pm

சர்வதேச ரேஸ்ஸரும், பாரதிய ஜனதா கட்சியின் இளைஞர் மேம்பாடு மற்றும் விளையாட்டு பிரிவு மாநிலச் செயலாளர் அலிஷா அப்துல்லா மற்றும் அவரது கணவர் நவீன் சென்னை தி நகர் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அலிசா கணவர் நவீன் பேசியதாவது :- கடந்த சில நாட்களாக அலிசா போலி மருத்துவர் என்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அலிசாவின் குடும்பத்தினரை தாக்கும் விதமாக சமூகவலைதலங்களில் தன்னை தாக்குகின்றனர். மருத்துவ சான்றிதழ் இல்லாமல் ஊசி போடுகிறார் என்று தெரிவித்து வருகின்றனர். அவை அனைத்தும் அவர்களின் சுய லாபத்திற்கும், அரசியலுக்கும் பரப்பப்படும் வதந்திகள்.

அழகு கலை சம்பந்தபட்ட விசியங்கள் தான் இவர்கள் செய்தார்கள். புகைப்படங்கள் விளம்பரத்திற்கு எடுத்தது. கிளினிக் -இல் வேறு மருத்துவர்கள் தான் மருத்துவம் செய்கிறார்கள்.
பெண்கள் அரசியலில் குறைவு. அவர்களுக்கு ஆதரவு கொடுங்கள். திமுக ஏன் என்னை குறி வைத்து தப்பாக விமர்சனம் செய்கிறார்கள். பாஜக கட்சி வந்து மூன்று மாதங்கள் தான் ஆகிறது. ஆனால் நான் இந்த புகைப்படம் அதற்கு முன் எடுத்தது. அப்போது யாரும் பேசவில்லை, என தெரிவித்தார்.

தொடர்ந்து பாஜக பிரமுகர் அலிசா கூறியதாவது :- என்னுடைய கிளினிக் சான்றிதழ், மெடிக்கல் கவுன்சில் அளித்த சான்றிதழ். எல்லா பேட்டிகளிலும் நான் 3ஆம் ஆண்டு மருத்துவ படிப்பு என்றுதான் சொல்லி இருக்கிறேன். நான் மருத்துவர் என்று சொல்லவில்லை. தான் ஒரு விளையாட்டு வீராங்கனை என்றே கூறி வருகிறேன்.

தனது மருத்துவ படிப்பினை BE MS, டெல்லியில் படித்து கொண்டிருக்கிறேன். தான் சிறுபான்மையினர். முஸ்லிம் என்பதாலும், பாஜகவில் இருப்பதாலும் இப்படி எல்லாம் பேசுகிறார்கள்.

எதற்கு நீங்கள் அரசியலுக்கு வந்தீர்கள் என்று முதலில் எல்லாரும் கேட்டார்கள். தம்மை போன்ற பெண்களை விளையாட்டு துறையில் அல்லது அரசியலில் வர முன்னோடியாக இருப்போம். திமுக நாடாளுமன்ற உறுப்பினரின் மகன் தான் இப்படி செய்கிறார். கட்சி ரீதியாக எனக்கு 100% ஒத்துழைப்பு உள்ளது. தலைவர் அண்ணாமலை இல்லை என்றால் நான் அரசியலில் இருந்து இருக்க மாட்டேன். காயத்ரி ரகுராம் பல தவறான கருத்துகளை கட்சிக்கு எதிராக பரப்பி வருகிறார்.

என் பிரச்சனை நான் தான் பேச வேண்டும். எனக்காக அவர் பேச வேண்டியதில்லை. அவர் என் உடன் இருந்து எனக்கு உறுதுணையாக இருக்கிறார். பாஜகவில் சில சட்டங்கள் உள்ளது. ஒரு பிரச்சனை என்றால், அதனை சரிசெய்ய அதற்கு நேரமாகும். பிரியா இறப்புக்கு காரணமாக இருந்த மருத்துவர்கள் முகம் தெரியப்படுத்தவில்லை. ஏனென்றால், அவர்களுக்கு சங்கம் துணை இருக்கிறது, எனக் குறிப்பிட்டார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 486

    0

    0