இடைத்தேர்தலில் பாஜக தனித்து போட்டி? வலியுறுத்திய நிர்வாகிகள்.. அண்ணாமலை எடுத்த அதிரடி முடிவு!!

Author: Udayachandran RadhaKrishnan
31 January 2023, 5:32 pm

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடுமா? எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு ஆதரவு தருமா? ஓ.பன்னீர் செல்வம் தரப்பிற்கு ஆதரவு தருமா? என்பதில் தொடர்ந்து குழப்பாமான சூழ்நிலையே நிலவி வருகிறது.

இந்நிலையில், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் அக்கட்சியின் ஆலோசனை கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் பாஜக முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த கூட்டத்தில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக தனித்து வேட்பாளரை களமிறக்கலாமா?, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கூட்டணியில் களமிறங்க உள்ள அதிமுக வேட்பாளருக்கு பாஜக ஆதரவு தரலாமா?, ஓ.பன்னீர் செல்வம் தரப்பு வேட்பாளருக்கு பாஜக ஆதரவு தரலாமா?, தேர்தலில் போட்டியிடாமல் விலகலாமா? என பல்வேறு வழிமுறைகள் குறித்து தீவிர ஆலோசனை நடைபெற்று வருகிறது.

கூட்டத்தில் பங்கேற்ற பாஜக நிர்வாகிகள் பலர் இடைத்தேர்தலில் பாஜக தனித்து போட்டியிட வேண்டும் என வாதத்தை முன் வைத்துள்ளனர்.

இந்த ஆலோசனைக்கு பின் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தங்கள் நிலைப்பாடு குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • Sarathkumar in The Smile Man நான் UNCLE-ஆ…”தி ஸ்மைல்மேன்”பட விழாவில் ஆவேசம் அடைந்த சரத்குமார்..!
  • Views: - 419

    0

    0