பொதுச்சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தாக கைது செய்யப்பட்ட பாஜக பிரமுகர் அமர்பிரசாத் ரெட்டியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை கிழக்கு கடற்கரை சாலை பனையூரில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வீடு உள்ளது. இதன் அருகே அனுமதியின்றி சுமார் 50 அடி உயரம் கொண்ட பாஜக கொடிக்கம்பம் நடப்பட்டதாக புகார் எழுந்தது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் அதிகாரிகள், கொடிக்கம்பத்தை அகற்றினர்.
இதனால் ஆத்திரமடைந்த பாஜக தொண்டர்கள் அந்த வாகனத்தின் கண்ணாடியை கற்களை எறிந்து உடைத்தனர். இதன் காரணமாக பரபரப்பு நிலவியது. மேலும், வாகனத்தின் கண்ணாடியை உடைத்த பாஜகவினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இந்த வழக்கில் பாஜக பிரமுகர் அமர் பிரசாத் ரெட்டி மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது.
ஆனால், அவர் தலைமறைவானதால் கைது செய்யப்படாமல் இருந்த நிலையில், கானாத்தூர் தனிப்படை போலீசார் குரோம்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் அமர் பிரசாத் ரெட்டியை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரது கைது நடவடிக்கைக்கு பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்த நிலையில், பாஜக பிரமுகர் அமர்பிரசாத் ரெட்டியை மேலும் 3 வழக்குகளில் சென்னை போலீசார் அவரை கைது செய்தனர். கோட்டூர்புரத்தில் தமிழக அரசின் பேனரை சேதப்படுத்திய வழக்கிலும், நுங்கம்பாக்கத்தில் போலீசாருடன் தகராறில் ஈடுபட்ட வழக்கிலும், தென்காசியில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கிலும் அடுத்தடுத்து கைது செய்தனர்.
இதைத் தொடர்ந்து, நிலுவையில் உள்ள வழக்குகளிலும் அவரை கைது செய்து குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க போலீசார் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கனவுக்கன்னி தற்கால இளைஞர்களின் கனவுக்கன்னிகளில் ஒருவராக வலம் வருபவர் மாளவிகா மோகனன். இவர் மலையாளத்தில் மிக பிரபலமான நடிகையாக வலம்…
தமிழ் திரைப்பிரபலங்களின் திடீர் மறைவு திரையுலகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது. அந்த வகையில் பிரபல திரைப்பட இயக்குநர் திடீரென மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.…
தமிழக வெற்றி கழகம் கட்சியின் பூத் கமிட்டி முகவர்கள் கூட்டம் இன்று மாலை கோவை சக்தி சாலை குரும்பபாளையம் பகுதியில்…
விஜய்யின் ரோட் ஷோ தவெக தலைவர் விஜய் இன்று கோவையில் நடைபெறும் தனது கட்சியின் பூத் கமிட்டி மாநாட்டில் பங்கேற்கிறார்.…
சமீபத்தில், பிரபலமான ஹாலிவுட் வெப் தொடரான Wednesday சீசன் 2-ன் டிரெய்லர் வெளியாகி, கோலிவுட் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை…
This website uses cookies.