சட்டென பொறுக்கி என்று சொன்ன நாஞ்சில் சம்பத்… கொந்தளித்த பாஜகவினர்… ரனகளமான அரங்கம்..!!

Author: Babu Lakshmanan
23 December 2022, 5:03 pm

பாஜகவினரை பொறுக்கி எனக் கூறிய நாஞ்சில் சம்பத்திற்கு எதிராக பாஜகவினர் ஆர்ப்பாட்டம் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பிரபல தனியார் தொலைக்காட்சி மக்கள் சபை எனும் விவாத நிகழ்ச்சியை வாராவாரம் ஒளிபரப்பி வருகிறது. அந்த வகையில், இந்த வாரத்திற்கான நிகழ்ச்சி ஈரோடு மாவட்டம் வேளாளர் கல்லூரியில் நடைபெற்றது. அப்போது, பேசிய நாஞ்சில் சம்பத், பாரதிய ஜனதா கட்சியினரை பொறுக்கி என்று குறிப்பிட்டு பேசினார்.

இதனால், அரங்கில் பார்வையாளர்களாக இருந்த பாஜகவினர் கோபமடைந்தனர். ஒருகட்டத்தில், அனைவரும் மொத்தமாக எழுந்து மேடையை நோக்கிச் சென்று தங்களது எதிர்ப்பினை பதிவு செய்தனர். மேலும், நாஞ்சில் சம்பத் பேசியது தவறு என்றும், அதை அவர் ஒப்புக்கொள்ள வேண்டும் என்றும் கூறி ஆர்ப்பாட்டம் செய்தனர். இதனால், நிகழ்ச்சி நடந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர், தான் பேசியது தவறு என உணர்ந்திய நாஞ்சில் சம்பத், தான் பேசிய வார்த்தையை திரும்பப் பெறுவதாகக் கூறினார். இதனால், நிகழ்ச்சியில் மீண்டும் அமைதி திரும்பியது. இந்த சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 679

    0

    0